பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்169

கில்லாததிதிமக்களாகிய அசுரர்கள், தேர் உந்தினர்-தேரை எதிரிற் செலுத்தி
வந்தார்கள்;(எ-று.)-தைத்தியர்என்ற இது-தயித்தியர் எனப் போலிபெற்று,
மோனைப்பொருத்தம்நோக்கி, தெயித்தியர் எனத் திரிந்துநின்றது.  (241)

66.-போர்செய்யஅஞ்சிய தானவரைநோக்கி அஞ்சாதவர்
கூறியது.

என்னேயொருமா னுடனுக்கெவரும்
கொன்னேயடலாண் மைகொடுக்குமதோ
இன்னேயிவனாவியழித்திமையோர்
முன்னேவயவா கையுமுற்றுவமால்.

                   மூன்றுகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.)என்னே - (இது) என்ன செய்கை?  ஒரு மானுடனுக்கு -
மனிதனொருவனுக்கு,எவர்உம் - (அசுரர்கள்) யாவரும், கொன்னே -
வீணாக,அடல் ஆண்மை - பல பராக்கிரமங்களை,கொடுக்குமதுஓ -
இழப்பது தகுதியோ?  இன்னே - இப்பொழுதே, இவன் ஆவி அழித்து -
இவனது உயிரை உடம்பினின்று ஒழித்து, [கொன்றுஎன்றபடி],இமையோர்
முன்னே-தேவர்களது முன்னிலையிலே,வயம் வாகைஉம் - வெற்றிக்கு
அடையாளமான வாகைப்பூமாலையையும்,முற்றுவம் - குறைவின்றி
அணிவோம்;(எ-று.)-'என்றுகூறி'என வருவிக்க.  ஆல் - அசை:
தேற்றமுமாம்.

    என்-எவனென்னும் அஃறிணைமுற்றின்விகாரம்;ஏ-சாரியை. கொன் -
பயனின்மைப்பொருள் குறிப்பதோர் இடைச்சொல்;இமையாக்கண்ணராகலின்,
'இமையோர்'என்றார்: இவ்வினையாலணையும்பெயரில்எதிர்மறை யாகாரம்
புணர்ந்து கெட்டது: விகுதிமுதலாகாரம் ஓவாயிற்று.  இனி, இமையில்
(மூடாமையாகிய) விசேஷமுடையவரென்றுமாம். முன், இங்கே-இடமுன்.
வாகை என்னும் மரத்தின்பெயர், இங்கே, இருமடியாகுபெயர்.  வென்றோர்
வாகைமாலைசூடுவரென்பது, தமிழர்மரபு.  முற்றுவம் - நீங்களும் யாமும்
என முன்னிலையாரைத்தம்மோடு உளப்படுத்தி அதற்கு உரிய அம்விகுதி
பெற்றுவந்த தன்மைப்பன்மைமுற்று;[நன்- வினை- 13.]      (242)

67.-இதுமுதல்ஐந்துகவிகள் - தானவருடன்
அருச்சுனனுக்குக்கடும்போர் விளைய, அவன்
அவர்களொழியுமாறுபிரமாஸ்திரந் தொடுத்தமை கூறும்.

காளப்புயலென் னநிறங்கரியார்
மீளப்படைகொண் டுவிரைந்துவெகுண்டு
ஆளித்திறன்மொய்ம் பனையங்கடலால்
வாளக்கிரியென் னவளைந்தெவரும்.