மாறுஆய்-பகையுடையதாய், அவர்-அவ்வசுரர்களுடைய என்றும் உரைக்கலாம். வாள்-உரிச்சொல். (249) 74.-இருகோடியசுரர்திரண்டுஅருச்சுனனோடுபொர நெருங்குதல். குருகோடியையுங் குருதிக்கடல்வாய் ஒருகோடிதயித் தியராருயிருண்டு அருகோடியவாளி யடர்ப்பதுகண்டு இருகோடியுமுற் றனமற்றிவன்மேல். |
(இ-ள்.) அருகுஓடிய வாளி-(அவ்வசுரர்களது) சமீபத்திலே விரைந்துசென்ற அந்த அஸ்திரம், குருகோடு இயையும் குருதி கடல்வாய்- (கழுகு முதலிய புலாலுண்ணும்) பறவைகளோடு பொருந்திய இரத்தசமுத்திரத்திலே, ஒரு கோடி தயித்தியர் ஆர்உயிர் உண்டு-ஒருகோடி அசுரர்களது அருமையான உயிரை (உடம்பினின்று எடுத்து) உட்கொண்டு, அடர்ப்பது-அழித்துவருவதை, கண்டு-பார்த்து, இருகோடிஉம்-(அசுரர்களது மற்றை) இரண்டுகோடித் தொகையும், இவன்மேல்-அருச்சுனன்மேலே, உற்றன-வந்து நெருங்கின;(எ-று.)-மற்று-அசைநிலை;வேறு என்னும் பொருள தாக்கி, மற்றிருகோடி யென இயைத்தலுமாம். (250) வேறு. 75.-இதுமுதற்பதினான்குகவிகள்- பலவகைப் படைகள் கொண்டு அருச்சுனனும்அசுரசேனைகளும்பொர, அசுரசேனைதேய்ந்தமை கூறும். இருண்டதுமண்ணும் விண்ணு மெல்லையெண்டிசையு மெங்கும் புரண்டது குருதிவெள்ள மூழிவெங் கடலிற் பொங்கி முரண்டகுதேரோன் றன்னைமொய்த்தவெம் பனிபோன் மூடித் திரண்டதுதிருகி மீண்டுந் திறலுடைத் தகுவர் சேனை. |
(இ-ள்.)மண்உம் - பூமியும், விண்உம்-ஆகாயமும், எல்லை எண்திசைஉம் - எட்டுத்திக்குகளின் எல்லைகளும்,இருண்டது - (தனித்தனி இறந்துபோன அசுரர்திரளால்) இருட்சியடைந்தது;குருதி வெள்ளம்- (அவர்களது) இரத்தப்பெருக்கம், ஊழி வெம் கடலின்-பிரளயகாலத்துக் கொடிய கடல்போல, பொங்கி (மேன்மேல்) அதிகப்பட்டு, எங்குஉம்- எவ்விடத்தும், புரண்டது-(அளைகளோடு)பரவிற்று;திறல் உடை தகுவர் சேனை-வலிமையையுடைய(மற்றை இருகோடி) அசுரர்களுடைய சைனியம், முரண் தகு தேரோன் தன்னை-வலிமைபொருந்தியதேரையுடைய சூரியனை, மொய்த்த-(சுற்றிலும்) நெருங்கி மறைத்த, வெம் பனி போல்-கொடிய பனி போல, (முரண் தகு தேரோன் தன்னை)- வலிமைபொருந்திய தேரையுடைய அருச்சுனனை,மூடி-மறைத்து, மீண்டுஉம் - மறுபடியும், திருகி திரண்டது- சுற்றிலும் வளைந்துகூடிற்று.(எ-று.) |