மேலே, கடு கணைகள்ஏவி-கொடிய அம்புகளைப்பிரயோகித்து, தேர் முகத்து இயக்கம் மாற்றி-(அவனது) தேரினது முன்செல்லுதலைத்தடுத்து, வெம் போர் செய்ய-கொடிய யுத்தத்தைப்பண்ண, போர்முகத்து ஒருவர் ஒவ்வா- போர்களத்திலே ஒருவரும் (தனக்கு) ஒப்பாகப் பெறாத,புரி சிலை வீரன்தான்உம்-கட்டமைந்த வில்லையுடையஅருச்சுனனும், கூர் முகம்- கூர்மையாகிய நுனியையும், பகுவாய்-பிளவுபட்ட வாயையுமுடைய, கொடு- கொடிய, கடு-வேகத்தையுடைய, மாயோன் பகழி-திருமாலினது அஸ்திரத்தை, கோத்தான்-தொடுத்தான்; (எ-று.) மாயோன்பகழி-வைஷ்ணவாஸ்திரம். விரைவுணர்த்தும் 'கடி'என்னும் உரிச்சொல், கடும் எனத் திரிந்தது. (253) 78. | விண்ணிடத்தசனிநாகர் மேல்வெகுண்டிடுவதென்ன எண்ணுடைச்சேனைவெள்ளமெங்கணுந்தானேயாகி வண்ணவிற்படையிராமன் வாரிதிவெள்ளம்வீத்த பண்ணெனப்படுத்தந்தப் பைந்துழாய்ப்பரமன்வாளி. |
(இ-ள்.) பைதுழாய் பரமன்-பசிய திருத்துழாய் மாலையையுடைய யாவரினுஞ் சிறந்த திருமாலைத்தெய்வமாகவுடைய, அந்த வாளி-அந்த அஸ்திரம் ஒன்று,-விண்ணிடத்துஅசனி-மேகத்தினிடத்தே தோன்றுகிற இடி ஒன்றுதானே, நாகர்மேல் - பாதாள லோகத்திலுள்ள சர்ப்பசாதியார் பலர்மேலும், வெகுண்டிடுவது என்ன-கோபித்திடுவதுபோல, எண் உடை சேனைவெள்ளம் எங்கண்உம் - (இரண்டுகோடி யென்னுங்) கணக்கையுடைய சேனைக்கூட்டம்எவ்விடத்தும், தான்ஏ ஆகி-தானே சென்று நின்று, வண்ணம் வில் படை இராமன்-அழகிய கோதண்டமென்னும் வில்லைஆயுதமாகவுடைய ஸ்ரீராமபிரான், வாரிதி வெள்ளம் வீத்த-கடல் நீர்வெள்ளத்தை ஒழியச்செய்த, பண் என-விதம்போல, படுத்தது- (அசுரசேனையை)அழித்தது;(எ-று.) விண்மேகத்துக்கு இடவாகுபெயர். நாகராவார் - படமும் வாலு முடையராய் மனுஷ்யரூபமும் தெய்வப்பிறப்புமான தொரு சர்ப்பசாதியார். பாம்புகள் இடியோசையைக் கேட்ட மாத்திரத்தில் அஞ்சி அழியு மென்பது, நூற்றுணிபு;எண் உடை-"எண்பதுகோடிநினைந்தெண்ணுவன"எனக் கூறியுள்ளவாறு பல எண்ணங்களையுடையஎன்றுமாம். வாரிதி- நீர்தங்குமிடம்: வாரி-நீர். இராவணனாற்கவர்ந்துபோகப்பட்ட சீதாபிராட்டி இலங்கையிலிருக்கிற செய்தியை அனுமான் சென்று அறிந்துவந்து சொன்ன பின்பு, இராமபிரான் வானரசேனையுடனேபுறப்பட்டுச் சென்று கடற்கரையையடைந்து கடலைக்கடக்கஉபாயஞ் சொல்லவேண்டுமென்று வருணனைப்பிரார்த்தித்து அங்குத் தருப்பசயனத்திலே படுத்து ஏழுநாள் வரையிலே பிராயோபவேசமாகக் கிடக்க, கடலரசனாகியவருணன் அப்பெருமானது மகிமையை அறியாமல் உபேக்ஷையாயிருக்க, சக்கரவர்த்தித் திருமகனார்அதனைக்கண்டுகோபங்கொண்டு வானரர் நடந்து செல்லும்படி கடலைவற்றச் |