மனத்தில்கொள்ள-மனத்திலே (செயற்பாலதென்று) கொண்டு,-தேன் உடை தெரியல் வீரன் - தேனினையுடையமாலையையுடையஅருச்சுனன்,- தேரினை-ரதத்தை,திரிய ஓட்டி-திரும்பச் செலுத்தி, கானிடை கடவுள் வேடன் தரும் கணைகரத்தில் கொண்டு (கைலாசகிரியைச் சார்ந்த) தவவனத்திலே சிவபிரானாகியவேடன் தனக்குத் தந்தருளிய பாசுபதாஸ்திரத்தைக் கையிலே எடுத்து, தான் உடை தனுவில் பூட்டி - தான் உடைத்தாயிருக்கின்ற வில்லிலே தொடுத்து, அனு பட சமைந்தது - பிற்பட்டுப் போர்செய்யச் சித்தனாயிருந்ததை,ஓரார்-(அசுரர்கள்) அறியாதவர்களாய்,-(எ-று.)-'ஆவலங்கொட்டியார்த்தார்'என அடுத்த கவியோடு இயையும். அருச்சுனனுக்குப்பாசுபதந் தருங் காலத்துப் பரமசிவன் வேட வடிவம் பூண்டு வந்ததனால்,'கடவுள்வேடன்'என்றார். அனுப்படச்சமைதலாவது -"ஊக்கமுடையானொடுக்கம்பொருதகர், தாக்கற்குப் பேருந் தகைத்து" என்றவாறு போர்செய்கின்ற ஆட்டுக்கடா தன்பகைகெடப் பாய்தற்பொருட்டு பின்னே கால்வாங்குந் தன்மைபோல வலிமிகுதியுடைய அரசன் தன் பகைவர் மேற் செல்லும்பொருட்டுக் காலம்பார்த்துப் பின்னடைந்திருத்தல். அனுப்படுதல் - பின்படுதல்;அனு - பின்னென்னும் பொருள் தருவதோர் வடமொழி யிடைச்சொல். அனுப்பட என்பதற்கு - பின்புறமாகக் கணை வெளிப்பட என்று பொருள் கூறுதலும் உண்டு: இவன் பின்புறமாக வாளிதொடுத்ததை 17 - ஆம்போர்ச்சருக்கத்து 225- ஆங் கவியிலுமறிக. ஓரார் என்றதனால்,தம்முன் நிற்கமாட்டாமல், அருச்சுனன் தோற்றுப் புறங்கொடுப்பதாகக் கருதினார்அவுணர் என்க. மனத்திற் கொள்ளுதல் - அங்கீகரித்தல். (270) 95.-அருச்சுனன்புறங்கொடுத்ததாகக் கருதியதனால் அவுணர் ஆவலங்கொட்டியார்த்தல். தானவர்சமுகத்தோடு சமர்புரிந்தாற்றாதஞ்சி மானவன்முதுகுதந்தா னென்றுவாளசுரரெல்லாம் [ங்கி வேனில்வேளனையான்றன்மேல்வெகுண்டுவெங்கடலிற்பொ ஆனதங்கைவாய்சேர்த்தி யாவலங்கொட்டியார்த்தார். |
(இ-ள்.)'மானவன்- மனிதன்'தானவர் சமுகத்தோடு - அசுரர் கூட்டத்துடனே, சமர் புரிந்து - போர்செய்து, ஆற்றாது-முன் நிற்கமாட்டாமல், அஞ்சி - பயந்து, முதுகு தந்தான் - புறங்கொடுத்தான்,' என்று - என்று எண்ணிக்கொண்டும் சொல்லிக் கொண்டும், வாள் அசுரர் எல்லாம் - ஆயுதங்களையுடையஅசுரர்கள் யாவரும்,-வேனில்வேள் அனையான்தன்மேல்- வசந்தகாலத்துக்குரிய மன்மதனையொத்துஅழகிய அருச்சுனன்மேலே, வெகுண்டு - கோபித்து, வெம் கடலின் பொங்கி - கொடிய (பிரளயகாலத்துக்) கடல்போலச் சீறியெழுந்து, ஆன தம் கை வாய் சேர்த்தி - பொருந்திய தத்தமது கையைத் தத்தம் வாயினிடத்துச் சேர்த்து, ஆவலம் கொட்டி ஆர்த்தார் - இகழ்ச்சியொலியை யுண்டாக்கி ஆரவாரித்தார்கள்;(எ-று.) |