பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்227

இந்திரன்மொழியையனுசரித்து அருச்சுனன் பாசுபதம் பெற்றமை
முதலியகூறி, இந்திரன்கூறிய செய்தியையுந் தெரிவித்தானென்று
வியாசபாரதம் கூறும்.  'துன்பமகலமிக'என்றும் பாடம்.      (341)

5.-இரண்டுகவிகள்- ஒருதொடர்: உரோமசன்
அருச்சுனுடைய செய்திகளைச்சொல்லி, இந்திரன்
விருப்பின்படிதான்வந்தமை தெரிவித்தல்.

வாள்விசயன்புரவிசயன்றன்னைநோக்கிமன்னுதவம்புரிந்ததுவு
                                மகிழ்ச்சிகூர்ந்தவ்,
வேள்விசயந்தவிர்த்தபிரானருளால்வேண்டும்
              விறற்படைகளளித்ததுவும்விபுதர்கோமான்,
நாள்விசயம்பெறக்கொடுபோயும்பரூரினளிமகுடம்புனைந்ததுவு
                                  நாளுந்தன்பொன்,
தோள்விசயந்தொலைத்ததிறலவுணர்சேனை
           சுடுசரத்தாற்றொலைத்ததுவுஞ்சூழ்ந்த யாவும்.

     (இ-ள்.) வாள்விசயன்-ஒளிபொருந்திய அருச்சுனன், புரம் விசயன்
தன்னைநோக்கி - திரிபுரத்தைவென்றவனாகியசிவபிரானைக்குறித்து,மன்னு
- நிலைபெற்ற,தவம் - தவத்தை, புரிந்ததுஉம் - செய்ததையும், மகிழ்ச்சி
கூர்ந்து - மகிழ்ச்சிமிகுந்து, அ வேள் விசயம் தவிர்த்த பிரான் - அந்த
மன்மதனுடைய வெற்றியைப் போக்கிய சிவபிரான், அருளால் - அருளோடு,
வேண்டும்-(அருச்சுனன்) விரும்பிய, விறல் படைகள்-வலிமையுள்ள
படைக்கலங்களை,அளித்ததுஉம் - கொடுத்ததையும், விபுதர்கோமான் -
தேவர்கட்குத் தலைவனானஇந்திரன், உம்பர் ஊரின் கொடு போய் -
தேவலோகத்து அமராவதிக்குக் கொண்டுபோய், நாள்-நல்ல நாளிலே,
விசயம் பெற - வெற்றிபெறுமாறு, நளி மகுடம் புனைந்ததுஉம்- சிறந்த
கிரீடத்தைத் தரிப்பித்ததையும், நாள்உம் - பலகாலும், தன் - இந்திரனது,
பொன் தோள் விசயம் தொலைத்த- அழகிய தோள்வலிமையாற்
பெறலாகும் வெற்றியை யொழித்த, திறல் - வல்லமையையுடைய, அவுணர் -
(நிவாதகவசர் காலகேயர் என்ற) அசுரரின், சேனை- தொகுதியை,
(அருச்சுனன்), சுடு சரத்தால் - எரிக்கவல்ல அம்புகளைக்கொண்டு,
தொலைத்ததுஉம்- ஒழித்ததையும், சூழ்ந்த யாஉம் - மற்றுமுள்ள
எல்லாவற்றையும்,-(எ-று.)-'வரைவழியேவருவதுவும்'என மேலே தொடரும்.

     சிவபிரான்துவத்திலிருக்கையில்உமையினிடம்காதல்
விளைவிக்கும்பொருட்டுத் தேவர்களின் தூண்டுதலால் அப்பிரான்மீது
மன்மதன் மலரம்பைத் தொடுக்க, அப்போது அச்சிவபெருமான் தன்
நெற்றிக் கண்ணினால்அந்த மதனனையெரித்தானாதலால்,
'வேள்விசயந்தவிர்த்தபிரான்'என்றார். சூழ்ந்தயாவும் என்றது-ஊர்வசியாற்
காதலிக்கப்பட்டுச் சாபம்பெற்றுச் சாபவிமோசனமும் பெற்றமையைக்
காட்டுமென்னலாம்.  நளிர்மகுடம் என்றும் பாடம்.                 (342)

    
6.தன்னருகேயமரரெலாமினிதுபோற்றத் தனஞ்சயனங்கிருந்த
                      தற்பின்றயங்குஞ்சோதி,
மன்னுமெழிற்காந்தர்ப்பமென்னுநாம வரை
                  வழியேவருவது வுமருவுகாதல்,
உன்னுடையபெருந்துயரந்தணுயுமாறு