"மனமெண்ணுகினும்,மெய்மையலதுரையாநா"என்றாற்போன்ற நாவின்தூய்மை இயல்பை யுணர்த்துவதற்கு, 'நாத்தவறா'எனப்பட்டது. "விவாககாலத்திலும் மகளிரூடல்தீர்த்தலிலும் உயிர்காத்தற் பொருட்டிலும் எல்லாப் பொருளையும்ஒருங்கே இழக்க நேருகையிலும் பொய்மைகூறலுந் தகும்" என்ற நீதி நூலின் விலக்கும் இவனிடத்து இன்றென்பார், 'தெம்முனாயினுஞ்செவ்விமென்தேக மாமகளிர், தம்முனாயினும் நாத்தவறாவடல்வீமன்'என்றார்: இத்தொடரில், இவன் வீரர்களையும் மகளிர் போலவே எளிமையாகக் கருதுபவனென்ற கருத்துந்தோன்றும். இங்கு, அடல் வீமன் என்றது, சத்தியத்தின் திண்மையை விளக்குதற்கென்க. தம்முன் - தமதுமுன் பிறந்தவன்: முன் - காலவாகுபெயர். வாநரம் என்னும் வடசொல்லுக்கு - மனிதன்போல வடிவுள்ளதென்று பொருள். தெவ்+முன்=தெம்முன். போகமாமகளிர் என்று பிரதிபேதம். (363) 27.-'என்வாலைக்கடந்துபோ, பார்ப்போம்'என்று அநுமான் கூறுதல். துன்னும்வெஞ்சிலைவலிகொலோதோளிணைவலியோ என்னைநீபுகலாரடாவென்பதிங்கெவனோ உன்னைநீயறியாநெறியுணர்விலாமனிதா மன்னும்வாறனைக்கடந்துபோவல்லையேலென்றான். |
(இ-ள்)'இங்கு- இவ்விடத்திலே, என்னை-என்னைநோக்கி,நீ ஆர் அடா புகல் என்பது - 'நீயாரடா? சொல்'என்று (நீ) கேட்பது, துன்னும் வெம் சிலைவலி கொல் ஓ-(உன்னிடம்) பொருந்தின கொடிய வில்லின் வல்லமையினாலோ? தோள் இணைவலிஓ - (வேறு உவமையில்லாத ஒன்றோடொன்றொத்த)இரண்டு தோள்களின் வலிமையினாலோ? எவன்ஓ - இன்னும் எந்தக் காரணத்தினாலோ? உன்னைநீ அறியா நெறி உணர்வு இலா மனிதா - உன்னுடைய தன்மையை நீ யறியாத வழியறியாத மனிதனே! வல்லைஏல்- (நீ) வலிமையுடையையாவையானால்,மன்னும் வால்தனை கடந்து போ - (இங்குப்) பொருந்தின (எனது) வாலைத்தாண்டிப்போ', என்றான்- என்று (வீமனைநோக்கி அனுமான்) கூறினான்; நான் வினாவியதற்குஉன்னைஇன்னானென்றுதெரிவிக்காமல் மாறாக 'நீயார்?' என்று என்னைஅலட்சியமாக வினவுகின்றாயே? இதற்குக் காரணம் நீ உன்னைவலியவனாகநினைத்திருப்பதன்றோ? அங்ஙனம் உண்மையில் வலியவனாயிருப்பின்என் வாலைக்கடந்து செல், பார்ப்போம் என்று அநுமான் கூறினனென்க. உன்னைநீ யறியா என்ற தொடரில், உன்னைஎன் தம்பி யென்று அறிந்து கொள்ளாத என்ற பொருளும் அடங்கியுள்ளது. 'அறியாநெறி'என்றெடுத்து, அறியாத நிலைமையையுடைய [புத்தியில்லாத],மனிதனே! என்று உரைப்பாருமுளர். முதனூலுக்கு ஏற்ப 'வால்தனைக்கடந்து'என்பதற்கு - (என்) வாலைஅப்பாற் கிடக்க விட்டு |