பக்கம் எண் :

250பாரதம்ஆரணிய பருவம்

     இந்த வாழ்வுடை- உனக்கு எதிரிற் காணப்படும் இவ்வுடலின்
தோற்றத்தையுடைய என்றபடி.  இது, தன்னைப்பிறன் போல் வைத்துக்
கூறியது.  அந்த-அசுரச்சுட்டு, பிரசித்தியைக் காட்டிற்று.  அடிமை -
அடியவனுக்குப் பண்பாகுபெயர்.  உந்தை - உன் தந்தை என்பதன் மரூஉ.
                                                     (373)

37.-வீமன் அநுமானைவணங்குதல்.

என்றவாசகமிருசெவிக் கமுதெனக்கேட்டுத்
துன்றுநெஞ்சினிலுவகையன் றுதித்தனன்றுள்ளி
என்றும்யாமுயறவப்பய னிருந்தவாவென்னாச்
சென்றிறைஞ்சினன்றிரைக்கடல் கடந்தசேவடிமேல்.

     (இ - ள்.)என்ற வாசகம் - என்று (அனுமான்) சொன்ன வார்த்தை,
இரு செவிக்கு அமுது என - (தனது) இரண்டு காதுகளுக்கும்
அமிருதம்போலிருக்க, (வீமன்), கேட்டு-, நெஞ்சினில்துன்று உவகையன் -
மனத்தில் மிக்குப்பொருந்தின மகிழ்ச்சியையுடையவனாய்,துதித்தனன் -
(அவ்வனுமானைத்)தோத்திரஞ்செய்து, துள்ளி-ஆனந்தக் கூத்தாடி,
'என்றுஉம்யாம் முயல் தவம் பயன் இருந்த ஆ(று) என்னா-எப்பொழுதும்
[பலகாலமாக]நாம் முயன்றுசெய்த நற்றவத்தின் பயன் இருந்தவிதம்
(என்னே!)'என்று அதிசயித்துக்கூறி, சென்று - அருகிற்போய், திரை கடல்
கடந்த சே அடிமேல் இறைஞ்சினன் - அலைகளையுடையகடலைத்
தாண்டியிட்ட (அவ்வனுமானின்) சிவந்த திருவடிகளின்மேல் விழுந்து
வணங்கினான்;   (எ-று.)

     செவிக்கு அமுதுஎன - அமிருதம் நாவுக்கு இனிமை தருவது போல
'அவ்வனுமான்நானே'என்று சொன்னவார்த்தை காதுக்கு இனிமைசெய்ய.
துள்ளுதல்-மகிழ்ச்சிபற்றிய மெய்ப்பாடு.  பல பிறப்புக்களிற் பலகாலஞ்செய்த
பெருந்தவமாகிய காரணம் இருந்தாலன்றி அனுமானுடைய தரிசனம்
கிடைக்காதென்ற கருத்தால், வியந்தான்.                       (374)

38.-'இங்குவந்தகாரணம் என்ன?'என்று வீமனை
அநுமான் வினாவுதல்.

தம்பியைத்துணைத்தாழ்தடக்கைகளாலெடுத்து
வம்புசேர்மணிமால்வரை மார்புறவணைத்துப்
பம்புசெந்தழற்கானிடைப் பதமலர்சிவப்ப
எம்பிநீதனிநடந்தவா றென்கொலென்றிசைத்தான்.

     (இ - ள்.)தம்பியை - (அவ்வாறு வணங்கிய தன்) தம்பியாகிய
வீமனை,(அனுமான்), தாழ் தட துணைகைகளால் எடுத்து-(முழங்காலளவும்)
நீண்டு தொங்குகின்ற பெரிய (தனது) இரண்டு கைகளாலும் (அன்புடன்)
எடுத்து, வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து-
(வெற்றிப்பூமாலையணிந்திருந்தலால்) வாசனைபொருந்தின அழகிய பெரிய
மலையோடொத்த(தனது) மார்பிலே