கவரும்பொருட்டு,உடன் மண்டி - சேர நெருங்கி, பற்றினன் - (போரில்) மூண்டான்;(எ - று.)-மற்று-வினைமாற்றுமாம். (413) 77. | குன்றொடுகுன்றமர்கூடுவதேபோல் நின்றுநெடும்பொழு தாகமலைந்தும் வன்றிறலுந்தம வாகுவின்வலியும் ஒன்றுமிளைத்திலரொத்தவுரத்தார். |
(இ - ள்.)குன்றொடுஒருமலையுடனே,குன்று - மற்றொருமலை, அமர் கூடுவது ஏ போல்-போருக்குப் பொருந்துவது போல,-நின்று நெடும் பொழுது ஆக மலைந்துஉம்- நிலையாகப்பொருந்தி நெடுநேரமாகப் போர்செய்தும்,-ஒத்த உரத்தார்-சமமான வலிமையையுடையரான அவ்விருவரும், வல் திறல்உம் - கொடியவலியும், தம வாகுவின் வலிஉம்- தம்முடைய தோள் வலியும், ஒன்றுஉம் இளைத்திலர்-சிறிதும் இளைத்தாரில்லை;(எ - று.) தம் -ஆறனுருபுஏற்ற பெயர். (414) 78.-அப்போதுஅசரீரி சொல்லலுறல். எல்லையிலாவமரிங்கிவரிவ்வாறு ஒல்லையின்மோதியுடன்றிடுபோழ்தில் தொல்லையிலோர்முனிசொல்லியசாபம் மல்லலரூபி வழங்கியதன்றே. |
(இ - ள்.)இங்கு - இவ்விடத்து, இவர் - வீமனும் புண்டரீகனென்ற அரக்கனும், இவ்வாறு-இவ்வகையாக, எல்லைஇலா அமர்-முடிவில்லாத போரை, ஒல்லையின்- விரைவாக, மோதி - தாக்கி, உடன்றிடு போழ்தில் - பொருகின்ற சமயத்தில்,-தொல்லையில்- முற்காலத்தில், ஓர்முனி - ஒருமுனிவன், சொல்லிய-, சாபம் - சாபத்தை, மல்லல் - வலிமைபொருந்திய, அரூபி - அசரீரியானது, வழங்கியது - சொல்லிற்று;(எ - று.)-அன்றே- ஈற்றசை. அசரீரிசொல்வது தவறாதாதலால் 'மல்லலரூபி'எனப்பட்டது. அரூபி - ரூபமற்றது:அசரீரியென்றபடி. (415) 79.-அசரீரிசொல்லிய வார்த்தை. ஒன்றினுமாவி யுனக்கிவனொல்கான் துன்றிடுதோண்மிசை தோமரமேவிக் கொன்றிடுவாயினி வாயுகுமாரா என்றதுவானி னிடத்தசரீரி. |
(இ - ள்.)வானினிடத்து - ஆகாயத்தினிடத்தே, அசரீரி-அசரீரியானது, 'இவன்- இந்த அரக்கன், ஒன்றின்உம் - வேறு எந்த வகையினாலும், உனக்கு-உன்னால்,ஆவி ஒல்கான்-உயிரொழியான்:இனி-, துன்றிடு- நெருங்கிய, தோள்மிசை - தோள்மீது, தோமரம்-தோமரத்தை, ஏவி - செலுத்தி, வாயுகுமாரா-! கொன்றிடுவாய் - கொல்வாய்,'என்றது-என்று கூறிற்று;(எ - று.) |