மிகுந்தஆயிரம்மந்திரங்களையுடையவரும்,-(எ-று.)-மன்,ஓ - ஈற்றசை. இங்கே ஆயிரம்என்றது - மிகப் பலவென்னும் பொருளையுணர்த்தும். பூழை-புழையென்பதன் நீட்டல். வென்றி உரங்கள் ஆயிரத்தர் - வெற்றியைத்தரும் பலவகை வலிமைகளையுடையார் எனவுமாம். ஊழி- யுகம் கற்பம் முதலிய காலத்தின் பேரெல்லையைக்குறிக்கும். (425) 89.-அப்போதுஅக்காவலாளர் மானுடநாற்றத்தை யறிந்துதிரளுதல். வைத்தாரைவாளம்வில்வேன் மழுவெழுதிகிரிசூலங் கைத்தாரைபடக்கொண்டென்றுங் கண்ணிமையாதுகாப்போர் மைத்தாரைமாரியெப்பார் மானுடநாற்றங்கேட்டு மொய்த்தாரக்கடவுள்வாச மொய்ம்மலர்ச்சோலையெல்லாம். |
(இ-ள்.)வை-கூர்மையாகிய, தாரை-நுனியையுடைய, வாளம்- வாளாயுதத்தையும், வில் - வில்லையும்,வேல் - வேலையும்,மழு- மழுவையும், எழு வளை தடியையும், திகிரி-சக்கரத்தையும், சூலம்- சூலத்தையும், கை-(தமது) கைகளிலே, தாரை பட - ஒழுங்கு பொருந்த, கொண்டு-ஏந்திக்கொண்டு, என்றுஉம்-எப்பொழுதும், கண் இமையாது காப்போர் - விழித்தகண் மூடாமற் காவல் செய்பவர்களும், தாரை மை மாரி ஒப்பார் - நீர்ப்பெருக்கை யுடைய கரியமேகத்தை (நிறத்தில்) ஒப்பவர்களும் (ஆகிய அரக்கர்கள்), மானுடன் நாற்றம் கேட்டு-மனிதனது கந்தத்தையறிந்து, அ கடவுள் வாசம் மொய் மலர் சோலைஎல்லாம் - தெய்வத்தன்மையுள்ள பரிமளமுடைய அடர்ந்த பூக்களையுடையஅந்தச்சோலையினிடம் முழுவதிலும், மொய்த்தார்-சூழ்ந்து நெருங்கினார்கள்; (எ-று.) மனிதகந்தத்தை மோந்து உணருந்தன்மையர் அரக்கரென்க. நாற்றங் கேட்டு என மூக்கின் வினையைச்செவியின் வினையாகக்கூறியது, ஓர் மரபுவழுவமைதி;புலன்மாறிவந்த வழக்கு எனப்படும்: "நாற்றங்கேட்டலுந் தின்ன நயப்பது"என்றார்கம்பரும். கடவுள் வாசம் - மற்றை மலர்களெல்லாவற்றினுஞ் சிறந்திருக்கும் பரிமளம். கடவுட்சோலையென்றும் இயைக்கலாம். மழு - பரசு என்னும் படை. (426) 90.-பொழிற்காவலாளர்வீமனைக்காணுதல். மண்டியெங்கெங்குமேன்மேன் மறிகடன்முகக்குநீலக் கொண்டலிற்குமுறியார்த்துக் குறுகியகொடியநீசர் சண்டவேகத்தினெய்துஞ் சதாகதிதனயன்றன்னைக் கண்டனர்சூலபாச காலனைக்கண்டதன்னார். |
(இ-ள்.) எங்குஎங்குஉம்-(அச்சோலையின்)எல்லாவிடங்களிலும், மண்டி - நெருங்கி, மேல் மேல்-வரவர, மறி கடல் முகக்கும் |