பக்கம் எண் :

28பாரதம்ஆரணிய பருவம்

38.-அருச்சுனனுடைய தவநிட்டை.    

ஒருதாளின்மிசைநின்றுநின்றதாளி னூருவின்மேலொருதாளை
                                யூன்றியொன்றும்,
கருதாமன்மனமடக்கிவிசும்பினோடுங்கதிரவனைக்
                       கவர்வான்போற்கரங்கணீட்டி,
இருதாரைநெடுந்தடங்கணிமையாதோராயிரங்கதிருந்தாமரைப்
                               போதென்னநோக்கி,
நிருதாதிபரின்மனுவாய்த்தவஞ்செய்வாரினிகரிவனுக்கார்
                          கொலெனநிலைபெற்றானே.

     (இ-ள்.) (அருச்சுனன்), ஒரு தாளின் மிசை நின்று-ஒருகாலை
நிலத்திலூன்றி அதன்மேல் நின்றுகொண்டு, நின்ற தாளின் ஊருவின்மேல்
ஒருதாளை ஊன்றி-நின்ற அக்காலினது தொடையின் மேல் மற்றொருகாலை
ஊன்ற வைத்துக்கொண்டு, ஒன்றுஉம் கருதாமல் மனம் அடக்கி-
(பரமசிவனைத்தவிர) யாதொரு விஷயத்தையுஞ் சிறிதும்நினையாதபடி
மனத்தை அடங்கச்செய்து, விசும்பின் ஓடும் கதிரவனை கவர்வான் போல்
கரங்கள் நீட்டி - ஆகாய மார்க்கத்தில் விரைந்து செல்லுகின்ற சூரியனைக்
கைகளாற் பிடிக்க முயல்பவன்போலக் கைகளை மேலே உயர்த்தி
வைத்துக்கொண்டு, இரு தாரை நெடு தட கண் இமையாது-
கருவிழிகளையுடைய நீண்ட பெரிய கண்களிரண்டையும் இமைக்காமல், ஓர்
ஆயிரம் கதிர்உம்-(சூரியனது) ஆயிரங்கிரணங்களையும், தாமரை போது
என்ன நோக்கி-(ஆயிரம் இதழ்களையுடைய) தாமரைமலரைப்
பார்ப்பதுபோலக் குளிரப்பார்த்துக்கொண்டு, நிருத அதிபரில் மனு ஆய்
தவம் செய்வாரில்-தவத்தைச் செய்பவர்களாகிய
இராக்கதத்தலைவர்களுள்ளும், இவனுக்கு நிகர் ஆர்கொல் என-
இவ்வருச்சுனனுக்கு ஒப்பாவார் யாவரோ?(எவருமிலர்) என்னும்படி,
நிலைபெற்றான்-(தவத்தில்) உறுதியாய் நின்றான்; (எ-று.)

    தாமரைப்பூவைப் பார்ப்பதுபோலச் சூரியகிரணங்களைக் குளிரப்பார்த்தன
னென்பதாம்.  கதிரவன்-கிரணங்களையுடையவன்; மற்றையிருசுடர்களாகிய
சந்திர அக்கினிகளுக்கு ஒளியைக் கொடுத்து வாங்குகிற சிறப்புப்பற்றி,
பெருஞ்சுடராகிய சூரியனுக்குக் கதிரவன் என்று பெயர். தாரை-கண்ணின்
கருவிழி. காசியப மகாமுனிவரின் மனைவியருள் ஒருத்திக்கு மனு என்று
பெயர்: அச்சொல் - ஆகுபெயரால் அவளிடந்தோன்றிய
மனிதரையுணர்த்திற்று.                                      (38)

39.-அக்கினிகள் அருச்சுனனைச்சுடாமை.

தோற்றியதெம்மிடத்தேயித்தோன்றன்மாலைசூட்டியபொற்றொடி
                         யென்றோதுரங்கம்பொற்றேர்,
கூற்றியல்வெஞ்சிலைபாணந்தூணி நாணிகுரக்குநெடுங்
                   கொடிமுன்னங் கொடுத்தே மென்றோ,
காற்றினுடன்விரைவுறச்சென்றருந்துமாறுகாண்டவநம்பசிக்
                              களித்தகாளையென்றோ,
நாற்றிசையும்வளர்த்ததழற்கடவுளந்த நரனுடலங்குளிர்
                             விக்குநாரம்போன்றான்.

    (இ-ள்.)  'இ தோன்றல்-விளங்குகின்ற இவ்வருச்சுனனுக்கு, மாலை
சூட்டிய - மணமாலையைச் சூட்டின, பொன் தொடி-பொன்னி