பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்281

97.தண்டினாலவர்கள்விட்டபடையெலாந்தகர்த்துமீள
மண்டினானுழுவைகண்டவாளுகிர்மடங்கலொப்பான்
மிண்டினாருடலம்யாவுமெய்தலைதம்மினொன்றக்
கிண்டினான்மூளைச்சேற்றிற்கிடத்தினான்படுத்துமன்னோ.

     (இ-ள்.)உழுவைகண்ட-புலிகளை(த்தன்னைச்சூழ்ந்துநெருங்கிப்
போர்செய்ய)ப் பார்த்த, வாள் உகிர் மடங்கல்-வாளாயுதம் போலக்
கூர்மையான நகங்களையுடையசிங்கத்தை, ஒப்பான் - போல்பவனாகிய
வீமன்,-தண்டினால்-(தனது)கதாயுதத்தாலே,அவர்கள் விட்ட படைஎலாம்
தகர்த்து - அவ்வரக்கர்கள் வீசின ஆயுதங்களையெல்லாம்உடைத்திட்டு,
மீள மண்டினான்-மறுபடிமிகநெருங்கினவனாய்,மிண்டினார்உடலம் யாஉம்
- (தன்னை)நெருங்கிச் சூழ்ந்த அரக்கர்களின் உடம்புகளையெல்லாம்,மெய்
தலைதம்மின்ஒன்ற-உடம்பும் தலையும்(கீழே விழுந்து) தமக்குட்சேரும்படி,
கிண்டினான்கீண்டெருத்து, மூளை சேற்றில் படுத்து கிடத்தினான் -
(அவர்களின்) மூளைகளாகிறசேற்றிலே தள்ளி விழுந்து கிடக்கச் செய்தான்;

     தண்டு -தண்டம்;வடசொல் விகாரம்.  பலத்திற்குறைந்த அரக்கர்க்குப்
புலிகளும், ஆற்றலில் மிக்க வீமனுக்குச் சிங்கமும் உவமையாம்.
மூளையென்றது, தலையினின்றுவழிந்த ஒருவகை நிணத்தை. மன், ஓ -
ஈற்றசைகள்.                                               (434)

98.தாக்கினான்சிலரைத்தண்டாற்றடக்கையாற்சிலரைவானில்
தூக்கினான்கறங்கினின்றுசுழற்றினான்சிலரையெற்றி
நூக்கினான்சிலரைத்தாளானொறுக்கினான்சிலரைவாளால்
வீக்கினான்சிலரையாவிவேறிட்டான்சிலரைவீமன்.

     (இ-ள்.)வீமன்-,சிலரை - சில அரக்கர்களை,தண்டால் - (தனது)
கதையினால்,தாக்கினான்- மோதியடித்தான்;சிலரை-,தட கையால் - பெரிய
(தனது) கைகளால், வானில் தூக்கினான்- ஆகாயத்தையணுகத்
தூக்கிப்பிடித்தான்; சிலரை-,நின்று - (தான்) நிலைநின்று,கறங்கின்
சுழற்றினான்- காற்றாடிபோலச்சுழலச்செய்தான்;சிலரை-,எற்றி நூக்கினான்-
(கையால்) அடித்துத் தள்ளினான்;சிலரை-,தாளால் நொறுக்கினான்- காலால்
மிதித்துத் துவைத்தான்;சிலரை-,வாளால் வீக்கினான் -
வாளாயுதத்தினால்வெட்டினான்;சிலரை-,ஆவி வேறு இட்டான் -
(உடம்பினின்றும்) உயிர் வேறாம்படிசெய்தான்;(எ-று.)                (435)

99.பிடித்தனன்சிலரையள்ளிப் பிசைந்தனன்சிலரைமண்ணில்
அடித்தனன்சிலரையங்க மகைத்தனன்சிலரையெண்ணம்
முடித்தனன்சிலரைப்போக முகிழ்த்தனன்சிலரைக்கண்டம்
ஒடித்தனன்சிலரையஞ்ச வுறுக்கினன்சிலரைமன்னோ.

     (இ-ள்.)(வீமன்), சிலரை-,பிடித்தனன் - (தன்கையால் ஒரு பிடியாகப்)
பிடித்தான்;சிலரை-,அள்ளி பிசைந்தனன் - ஒருங்கு எடுத்துப் பிசைந்தான்,
சிலரை-, மண்ணில் அடித்தனன்-நிலத்தில் மோதினான்;சிலரை - அங்கம்
அகைத்தனன்-அவயவங்களைஒடித்