தான்;சிலரை-,எண்ணம் முடித்தனன் - (அவர்கள்கொண்ட) எண்ணத்தைப் பாழாக்கினான்;சிலரை-,போக முகிழ்த்தனன் - அழிந்துபோம்படி ஒடுக்கினான்;சிலரை-,கண்டம் ஒடித்தனன்-கழுத்தை முறித்தான்;சிலரை-, அஞ்ச உறுக்கினன் - பயப்படும்படி அதட்டினான்;(எ-று.) இச்செய்யுளிலும் இதற்குமுந்தின செய்யுளிலும் சிலரையென வந்த சொல்லும்பொருளும் மீண்டும் பலவிடத்தில் வந்தது, சொற்பொருட்பின் வருநிலையணி. போகம் முகிழ்த்தனன் என்று பிரித்து - வீரசுவர்க்க இன்பம் அரும்பச்செய்தன னெனினும் அமையும். மன், ஓ-ஈற்றசை. (436) 100. | கரக்கழுந்ததனினானுங்கனவரைத்தோளினானும் வரக்கொடுங்கதையினானுமராமரப்பணையினானும் உரக்கடுங்காலினானுமொருக்கினானுரைப்பதென்னோ[னோன். அரக்கரையென்றாற்பின்னைவிடுங்கொலோவனுமன்பின். |
(இ-ள்.) கரம்கழுந்து அதனினான்உம்- (தனது) கைகளாகிய தண்டங்களாலும், கனம் வரை தோளினான்உம்- பெரிய மலைகள்போன்ற (தனது) தோள்களாலும், வரம் கொடு கதையினான்உம்- சிறப்பான கொடிய (தனது) கதாயுதத்தாலும், மராமரம், பணையினான்உம்- மராமரமென்னும் மரத்தினது கிளைகளாலும்,உரம் கடுகாலினான்உம்- வலிமையையுடைய கடுமையான (தனது) கால்களாலும், ஒருக்கினான்-(அரக்கர்களைவீமன்) அழியச்செய்தான்;உரைப்பது என்ஓ-(இனி நாம்) சொல்லவேண்டுவது யாது உளது? அரக்கர் என்றால்- (வந்து எதிர்ப்பவர்) இராக்கதராயிருந்தால், பின்னை- பின்பு, அனுமான் பின்னோன்-அனுமானதுதம்பியானவன் [வீமன்],விடும்கொல் ஓ - (அவர்களைஉயிரோடு) விட்டிடுவானோ? [விடானென்றபடி];(எ-று.) தன்னையெதிர்த்துப் பொருதுவந்த இராவணன்மகனானஅக்ஷகுமாரன் முதலிய சிறந்த இராக்கத வீரர் பலரையும் விடாமல் விரைவிற் கொலைசெய்தஅநுமான்போலவே, அவன் தம்பியாகிய வீமனும் தன்னையெதிர்த்தஅரக்கர் பலரையும் விடாது பலவகையால் அழியச்செய்தா னென்றவாறாம். இங்கு வீமனை'அனுமன்பின்னோன்'என்றது - கருத்துடையடைகொளியணியாம். கரக்கழுந்ததனினானும்- கையிலுள்ள தனுர்த்தண்டத்தாலும் என்றுமாம். ஒருக்கினான்,ஒருங்கு என்பதன் பிறவினையானஒருக்கு - பகுதி: ஒருக்குதல்-ஒடுங்கச்செய்தல். அரக்கரை, ஐ-சாரியை (437) 101.-வீமனைவேறு இலட்சம் அரக்கவீரர் மீண்டும் சூழ்தல். இப்படிக்கெதிர்த்தசேனையாவையுமிமைக்குமுன்னம் துப்புடன்றொலைத்துவாயுசுதனின்றவுறுதிநோக்கி மைப்படிவரைகள்போல்வார் வாளெயிற்றரக்கர்பின்னும் கைப்படைகொண்டுநூறாயிரரொருகணத்திற்சூழ்ந்தார். |
|