னாற்செய்த தொடியென்னும் வளையல்களையுடைய திரௌபதி, தோற்றியது- பிறந்தது, எம்இடத்துஏ-எமதிடத்திலேயாம்,'என்றோ-என்று எண்ணிய காரணத்தாலோ?'துரங்கம்-(நான்குவெள்ளைக்) குதிரைகளையும், பொன் தேர்-பொன்மயமான இரதத்தையும், கூற்று இயல் வெம் சிலை- (பகைவர்களைக் கொல்லுதலால்) யமனையொத்த கொடிய (காண்டீவமென்னும்) தனுசையும், பாணம்-அம்புகளையும், தூணி- அம்பறாத்தூணியையும், நாணி-வில்நாணியையும், குரங்கு நெடு கொடி- குரங்கின்உருவத்தையெழுதிய பெரிய துவசத்தையும், முன்னம்-முன்னே [காண்டவ தகனகாலத்தில்], கொடுத்தேம் - (இவனுக்கு நாம்) தந்தோம்,' என்றோ - என்று நினைத்த ஏதுவினாலோ? "காற்றினுடன்- (நமக்குத் துணைவனாகிய) வாயுவினுடனே, விரைவுஉற-வேகம்பொருந்த, சென்று - (நாம்) போய், அருந்தும் ஆறு - உண்ணும்படி, காண்டவம் - காண்டவமென்னும் வனத்தை, நம் பசிக்கு - நமது பசியை ஒழிப்பதற்கு, அளித்த-இரையாகக்கொடுத்த, காளை - வீரனாவான் (இவன்),'என்றோ- என்று கருதியதனாலோ? நால் திசைஉம் வளர்த்த தழல் கடவுள் - (அருச்சுனன் தவம் செய்யும்பொழுது தனக்கு) நான்கு பக்கங்களிலும் மூட்டி வளர்த்த அக்கினிதேவன், அந்த நரன் உடலம் குளிர்விக்கும் நாரம் போன்றான் - அவ்வருச்சுனனது உடம்பைக் குளிரச்செய்கின்ற நீரை ஒத்துத் தண்ணிய தாய்ச் சுடாமலிருந்தான்;(எ- று.) பஞ்சாக்கினிமத்தியிலிருந்து உடம்பைவருத்தித் தவஞ்செய்பவர்கள் அந்நெருப்பினது உஷ்ணத்தைக் கருதாமல் அதனைத் தண்ணியதாக நினைப்பர்: அங்ஙனம் நினைக்கப்படுகின்ற நெருப்பினது குளிர்ச்சியை இங்ஙனம் வருணித்தார்: ஏதுத்தற்குறிப்பேற்றவணியும் உவமையணியுஞ் சேர்ந்த வந்த சேர்வையணி. பொற்றொடி - மூன்றாம்வேற்றுமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. நாரம்என்னுஞ் சொல்லுக்கு - நரசம்பந்தமானது என்ற ஒருபொருளும் உள்ளதனால், ஒருவகைச் சாதுரியந் தோன்ற, கவி 'நரனுடலங்குளிர்விக்கும்நாரம்போன்றான்'என்றார். கிருஷ்ணனும் அருச்சுனனும் ஒருநாள் பூம்பந்தேறிட்டு விளையாடச் செய்தே, அக்கினிபகவான் மிகப் பசித்துவந்து, 'இந்திரனதுகாவற்காடாய் எவர்க்கும் அழிக்க வொண்ணாதபடியாய் நிலவுலகத்திலிருக்கின்ற காண்டவவனமென்னும் பூந்தோப்பை அதிலுள்ள சராசரங்களுடனே எனக்கு விருந்திட வேண்டும்'என்று வேண்ட, கிருஷ்ணார்ச்சுனர்கள் அங்கேபுக்கு ஒதுங்கியிருக்கின்ற அசுரர்முதலிய துஷ்டர்களை அழித்தருளவேண்டு மென்னும் நோக்கத்தால் 'நீஅதனைப்புசி'என்று இசைந்து அளிக்க, உடனே நெருப்புப் பற்றி எரித்த தென்பது, கதை. ஆசாரிய சிஷ்யக்கிரமத்தை அனைவரும் அறிந்து அநுஷ்டித்து உய்யுமாறு சிஷ்யனும் குருவுமாகிப் பதரிகாச்சிரமத்திலெழுந்தருளியிருக்கின்ற ஸ்ரீமகா விஷ்ணுவின் அமிசமாகிய நரன் நாராயணன் என்னும் முனிவர்களே இங்கு அருச்சுனனும் கிருஷ்ணனுமாகத் தோன்றின ராத |