பெயரின்வினையைக் கொண்டு முடிந்தன: திணைவழுவமைதிகள்: [நன்- வினை. 26] குறிப்பாலுள்ளும் என்றும் பாடம். (40) 41.-கவிக்கூற்று: அருச்சுனன் தவம்புரிந்த சிறப்பைக் கொண்டாடுதல். கருந்துறுகல்லெனக்கருதிப்பிடியுங்கன்றுங் களிற்றினமுமுட னுரிஞ்சக்கறையானேறிப், பொருந்துமுழைப்புற்றதெனப்புயங்கமூரப்பூங்கொடிகண் மரனென்று பாங்கேசுற்றப், பரிந்துவெயி னாண்மழை நாள்பனிநா ளென்று பாராம னெடுங்காலம் பயின்றான்மண்ணில், அருந்தவமுன்புரிந்தோரிலிவனைப்போன்மற் றார்புரிந்தார் சிவசிவவென்றரியவாறே. |
(இ-ள்.) பிடிஉம்-பெண்யானைகளும், கன்றுஉம்-யானைக் கன்றுகளும், களிறு இனம்உம்-ஆண்யானைக் கூட்டங்களும், (தவ நிலையிற்சலியாமல் நின்ற அருச்சுனனது உடம்பை), கரு துறு கல் என கருதி-கரிய துறுகல்லென்று நினைத்து, உடன் உரிஞ்ச-பொருந்திஉராயவும்,-புயங்கம்- பாம்புகள், கறையான்ஏறி பொருந்தும் முழை புற்று அதுஎன - செல்லுகள்வந்து ஏறித்தங்குதலால் துளையாகிய புற்றென்று நினைத்து, ஊர- மேலே தவழவும்,-பூ கொடிகள்-பூக்களையுடைய கொடிகள், மரன்என்று- மரமென்று கருதி, பாங்கு சுற்ற-(நான்கு) பக்கங்களிலும் சுற்றிக்கொள்ளவும், வெயில்நாள் மழைநாள் பனிநாள் என்று பாராமல்-வெயில்காயுங் காலமென்றும் மழைபெய்யுங்காலமென்றும் பனிபெய்யுங்காலமென்றும் அருமை பாராட்டாமல் (எக்காலங்களிலும்), பரிந்து-வருந்தி, நெடு காலம்- பலநாள், சிவசிவ என்று-சிவசிவ என்று (சிவநாமத்தை விடாமல்) உச்சரித்துக்கொண்டு, பயின்றான்-(அருச்சுனன்) தவஞ்செய்தான்; மண்ணில்- பூலோகத்தில், அருதவம் முன் புரிந்தோரில்-(செய்வதற்கு) அருமையான தவத்தை முற்காலத்திற் செய்தவர்களுள், இவனை போல்-இவ்வருச்சுனனைப் போல, மற்று ஆர் புரிந்தார்-வேறு யார் தவஞ்செய்தார்கள்?(எவருமில்லை); அரிய ஆறுஏ-(இவன் செய்த தவம்) அருமையான விதமேயாம்; (எ-று.) அருச்சுனன் அசையாதுநின்று தவம்புரிதலால் அவனுடலைக் கருநிறமுள்ள துறுகல்லென்று கருதிப் பிடியுங் களிறும் அவனுடலின்மீது உராயலாயின: அவனுடலைச் சுற்றிக் கறையா னேறவே பாம்புகள் புற்றென்றுகருதி அங்கு ஊரலாயின: அவனுடலை மரமென்று கருதிப் பூங்கொடிகள் சுற்றி வளரலாயின: இங்ஙனமாக எல்லாக் காலங்களிலும் சலியாது நின்று இடைவிடாமல் தவத்தைப் பயின்றானென்க மயக்கவணி.(41) 42. | பகிரதனே முதலானவெண்ணில்கோடிப் பார்த்திவருந் தவம்புரிந்தார்பைம்பொன்மேனி, இகலவுணர்முதலான ககனவாணரெத்தனைபேர்தவம் புரிந்தாரிமையோரேத்தும், மகபதிதன்மதலையிவனெழுதொணாதவனப்பினுக்கு வரிசிலைக்கைம் மதவேளொவ்வான், |
|