பக்கம் எண் :

314பாரதம்ஆரணிய பருவம்

ஆர்த்தனன் -ஆரவாரித்து, அழன்று - சீறி, தோள் கொட்டி - (தனது)
தோள்களைத்தட்டி, உக அந்த காலத்து மருத்து என - பிரளயகாலத்துப்
பெருங்காற்றுப்போல, மேல் மண்டி நடந்தான் - மேல் நெருங்கிச்
சென்றான்;   (எ-று.)

    திசை-இடவாகுபெயர்.  வெரூஉ-சொல்லிசையளபெடை.     (487)

12.-வீமன் சடாசுரனைநோக்கிஉன்னைக்
கொல்வேனெனல்.

பகன்விறலிடிம்பன்பண்பில்புண்டரீக னிவருயிர்பறித்தளகேசன்,
நகரிடையரக்கர்யாரையுஞ்சேர நல்லுயிரொல்லையிற்செகுத்து,
வகைபடமறலியுடனுறவாக்கி வானுலகளித்தனனின்ற,
சிகையுனதுயிருமிக்கணத்தளிப்பன் றென்புலக்கிழவனுக்
                                       கென்றான்.

     (இ-ள்.)'பகன்-பகாசுரனும்,விறல் இடிம்பன்-வெற்றியையுடைய
இடிம்பாசுரனும், பண்பு இல் புண்டரீகன் - நற்குணமில்லாத
புண்டரீகனென்னும் அரக்கர் தலைவனும்,இவர் - (என்கிற) இவர்களுடைய,
உயிர் - உயிரை, பறித்து - (உடம்பினின்று) நீக்கிவிட்டு [இவர்களைக்
கொன்று என்றபடி],அளகேசன் நகரிடை அரக்கர் யாரைஉம் -
அளகாபுரிக்குத் தலைவனானகுபேரனது நகரத்திலேயுள்ள
இராக்கதரெல்லோரையும், சேர - ஒருசேர, ஒல்லையில்- விரைவிலே, நல்
உயிர் செகுத்து -நல்லஉயிரை யொழித்து [கொன்றுஎன்றபடி],வகை பட -
வலிமைபொருந்த, மறலியுடன் உறவு ஆக்கி-யமனோடுஉறவினராம்படி
செய்து [இவர்களையமனைச்சேரும்படி செய்து],
வான் உலகு
அளித்தனன்-தேவலோகத்திலுள்ள வீரசுவர்க்கத்துக்குக்கொடுத்தேன்;
உனதுஉயிர்உம்-உன்னுடைய பிராணனையும்,நின்ற சிகை - எஞ்சிநின்ற
சிகையாக, இ கணத்து - இந்த க்ஷணத்திலேயே, தென் புலம் கிழவனுக்கு-
தெற்குத் திக்குக்கு உரிய தலைவனானயமனுக்கு, அளிப்பன் -
கொடுப்பேன்',என்றான்- என்று (வீமன் வீரவாதங்) கூறினான்;(எ-று.)

     வேத்திரகீயநகரத்தின் புறத்திலுள்ளதோர் வனத்தில் வசித்துக்
கொண்டு பகாசுரனென்பவன் அவ்வூரிலுள்ளவீடுகளிலிருந்து நாள்தோறும்
ஒருவண்டி யுணவையும், ஓரிளமகனையும்தனக்கு முறைப்படி திறையாகப்
பெற்று உண்டு வாழ்ந்திருந்தான்;இருக்கையில் பாண்டவர்கள்
அரக்குமாளிகையினின்று தப்பியுய்ந்து பிராமண வேடம்பூண்டு
குந்தியோடுகூட அவ்வூரில் ஓரந்தணன் மனையிற்சென்று தங்கியிருக்க,
ஒருநாள் அவ்வீட்டுக்குரிய முறை நேர்ந்தது:நேரவே, தன் மகனுக்கு
அழிவுண்டாவதனைநோக்கி வருந்திப் புலம்பிய அவ்வீட்டு வேதியன்
மனைவியினதுசோகத்தைத் தணித்துக் குந்தி தன்மகனானவீமனையனுப்ப,
இவன் சென்று அவனுக்கென்றுகொடுத்தஉணவையெல்லாந்தானுண்டு
அவனுடன் பொருது அவனையழித்துஅவ்வூரவர்க்கு இடையூறில்லாதபடி
செய்தன னென்பது கதை.  வகைபட-பல போர்வகை பொருந்த என்றுமாம். 
சிகை - எஞ்சிநிற்பது:சேடம்:இது இப்