முறியும்படி(மேலெழுந்து அவன்மேற்) பாய்ந்து, கட்டினன் - (அவனைத் தன் கைகளால் இறுகக்) கட்டி, குறங்கை - (அவனது) தொடைகளை, குறங்கினால்- (தனது) தொடைகளால், வீசி - வேகமாகத் தாக்கி, அகிலம்உம் கம்பம் உற்று கலங்க-எல்லாவுலகமும் (அதிர்ச்சியால்) நடுக்கமடைந்து கலங்கும்படி, கிட்டினன்-நெருங்கி, தலத்தின்மிசை-பூமியிலே, அடல் அரக்கன் கீழ் பட - வலிமையையுடைய சடாசுரன் கீழே பொருந்தவும், மேல் பட - (தான்) அவன் மேலே பொருந்தவும், விழுந்தான்- ;(எ-று.) (490) 15. | முன்னம்வாளெயிற்றோரரக்கனைவெள்ளி மால்வரைமுனிந்ததென்றதற்குப், பொன்னின்மால்வரையோரரக்கனைத்தானும்புவிப் படுத்தரைப்பதேபோலக், கன்னம்வாய்நெரியக்கரங்களான்மலக்கிக் கழுத்தையும்புறத்தினிற்றிருப்பித், துன்னுதோளிணையுந்தாளும்வன்னெஞ்சுஞ் சுளிதரத்தாளினாற்றுகைத்தான். |
(இ - ள்.)'முன்னம்- முன்னொருகாலத்திலே, வாள் எயிறு ஓர் அரக்கனை- கூர்மையையுடைய தந்தங்களையுடையஓர் இராக்கதனை [இராவணனை],வெள்ளி மால் வரை - வெள்ளி மயமான பெரிய கைலாசமலை,முனிந்தது - கோபித்து அழுத்திற்று,'என்றதற்கு - என்ற அச்செய்கைக்கு, (போட்டியாக), பொன்னின் மால்வரை - பொன் மயமான பெரிய மகாமேருகிரி, ஓர் அரக்கனை- ஓர் இராக்கதனை,தானும்-, புவி படுத்து - பூமியிற் கிடக்கச்செய்து, அரைப்பதுஏ போல - (அவனை) நெரிப்பதுபோல, கன்னம் வாய் நெரிய - (சடாசுரனது) கன்னங்களும் வாயும் நெரிபடும்படி, கரங்களால் மலக்கி-(தன்) கைகளாற் கலங்கச்செய்து, கழுத்தைஉம் புறத்தினில் திருப்பி - (அவனது) கண்டத்தையும் பின் பக்கத்தை நோக்கும்படி திருப்பிவிட்டு, துன்னு தோள் இணைஉம்-(அவனது) பொருந்திய இரண்டு புயங்களும், தாள்உம்-கால்களும், வல்நெஞ்சு உம்- வலிய மனமும், சுளிதர-ஒடியும்படி, தாளினால்-(தன்)கால்களினால், துகைத்தான்-(அவனைவீமன் மிதித்துத்) துவைத்தான்; தற்குறிப்பேற்றவணி. இராவணன் குபேரனோடுஎதிர்த்துப்பொருது அவனைவென்றுஅவனது புஷ்பகவிமானத்தைப் பறித்து அதன் மேலேறிக்கொண்டு கைலாசமலைக்குமேலாகஆகாசமார்க்கத்திலே விரைந்து மீண்டு வருகையில், அம்மலையின்மகிமையால் விமானந் தடைப்பட்டு நிற்க, அதற்குக் காரணம் இன்னதென்று அறியாது திகைக்கையில், நந்திதேவர் எதிரில்வந்து 'சிவபிரானுக்குத்தங்குமிடமான திருக்கைலாயத்தின் பெருமையிது'என்று சொல்லவுங் கேளாமல், தசமுகன், தனது பிரயாணத்துக்குத் தடையாகிய இம்மலையைஇப்பொழுதே வேரோடு பறித்து எடுத்து அப்பால் எறிந்துவிட்டுத் தடையின்றி மேற்செல்வேனென்று கூறி விமானத்தினின்றும் இறங்கித் தனது இருபது கைகளையும்அம்மலையின்கீழ்க் கொடுத்து அதனைப்பெயர்த்து அசைக்க, அதனையுணர்ந்தஉருத்திரமூர்த்தி சினந்து தன்கால்விரலாற் சிறிது அழுத்தவே, அரக்கன் மலையின்கீழ் அகப்பட்டுக் கைந்நசுங்கி மிக வருந்தி வெகுகாலம் புலம்பிப் பின்னர்ச் சாமவேதகானத்தாற் சிவ |