பக்கம் எண் :

328பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.)இடிம்பனைஅடும் திறலில் மிக்கான்-இடிம்பாசுரனைக் கொன்ற
வலிமையிலே மிகுந்தவனானவீமன்,-என்றுஇனையவாசகம் உரைத்து-என்று
இப்படிப்பட்ட வார்த்தைகளைக்கூறி, இகலின் என்றுஉம் வென்றி தரு தண்டு
சிலைகொன்டு-போரிலே எப்பொழுதுஞ் சயத்தையே கொடுக்கின்ற (தனது)
கதாயுதத்தையும் வில்லையும்ஏந்திக்கொண்டு, தன் துணைவர்ஒன்றுஉம்
உணராதபடி - தனது உடன்பிறந்தவர்கள் சிறிதும் அறியாதபடி,
விறலோடுஉம் - பராக்கிரமத்துடனே, தான்ஏ சென்றனன் - தான் மாத்திரமே
புறப்பட்டுப்போனான்;(எ-று.)

     இகலின்,இன்-ஏழனுருபு.  தானே, ஏ-பிரிநிலை. அடும் என்னும்
எதிர்காலப்பெயரெச்சம், இங்குக் காலங்குறியாமல் தன்மை குறித்து நின்றது.
                                                      (508)

7.-இதுமுதல்ஆறுகவிகள் - ஒருதொடர்: சென்ற வீமன்
இரத்தினகிரியடைந்துஅதன்புதுமைகளைக்கண்டு
களித்தமை கூறுதல்.

குன்றமொரிரண்டவை யெனக்குலவுதோளான்
மன்றன்மலர்கொண்டுவரு மாநதியின்வழியே
சென்றுபலயோசனைகடிங்களொடுநாளும்
என்றும்வலம்வந்தரு ளிரத்நகிரியெய்தி.

     (இ-ள்.)குன்றம் ஒர் இரண்டு அவை என குலவு தோளான்-ஒப்பற்ற
இரண்டுமலைகளென்னும்படி விளங்குகின்ற தோள்களையுடையனான
வீமன்-,மன்றல் மலர் கொண்டு வரும் மா நதியின் வழியே -
பரிமளத்தையுடைய அப்பூவை அடித்துக்கொண்டுவந்த பெரிய ஆறு வருகிற
வழியாகவே, பல யோசனைகள்சென்று - அநேக யோசனை
தூரங்கள்போய்,-திங்களொடுநாள்உம் என்றுஉம் வலம் வந்தருள் இரத்நகிரி
எய்தி - சந்திரனும் நக்ஷத்திரங்களுஞ் சூரியனும் எப்பொழுதும்]
பிரதக்ஷிணமாகச் சுற்றிவரப்பெற்ற (சிறப்பையுடைய) ரத்நகிரியென்னும்
மலையைஅடைந்து,-(எ-று.)-இச்செய்யுளில்எய்தி யென்னும்
வினையெச்சம்,மேல் பன்னிரண்டாங் கவியில் 'கண்டு'என்னும்
வினையெச்சத்தைக்கொண்டுமுடியும்.

     இரண்டவை,அவை-முதல்வேற்றுமைச்சொல்லுருபு. என்று-
ஒளியையுடைய தெனச் சூரியனுக்குக் காரணப்பெயர்;எல் - பகுதி,
இடைச்சொல்: ஒளியென்றுபொருள்;று - பெயர்விகுதி.  இரத்நகிரி -
சந்தவின்பத்தின்பொருட்டு வடசொல் சிறிதுதிரியாது நின்றது.  (509)

8.மரகதமணிப்பணிசெய் மாளிகைகளொருசார்
அரிமணியழுத்தியன வாலயமதொருசார்
எரிமணியழுத்தியன வில்லின்விதமொருசார்
தருணமணிமுத்தினிய லுஞ்சதனமொருசார்.