பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்339

யுடையமுருகக்கடவுளோ?  திறல் நரவாகனன் அளகாபுரி வருவோன்
எவன்ஓ - பராக்கிரமத்தையுடைய குபேரனது அளகாபட்டணத்தில்
வருபவனானநீ (இவர்களுள்) யாவனோ? உனது உயிர் சிந்தும் முன் நீ
யார் உரை-உன்னுடைய பிராணன் (எம்மால் உடம்பினின்று நீக்கப்பட்டுச்)
சிதறுதற்குமுன்னமே 'நீயார்?'என்ற வினாவிற்குவிடையைக் கூறுவாய்,'
என்றான்- என்று (வீமனைநோக்கிச்சாலேந்திரன்) கூறினான்;(எ-று.)

    திரிமூர்த்திகளும், அவர்களுள் ஒருமூர்த்தியின்மகனான
குமாரக்கடவுளும் என்னும் இவர்கள்மாத்திரமே இந்நகரத்தில் வருதற்கு
ஏற்றவரென்பது  இச்செய்யுளின் முதல்மூன்றடிகளின்கருத்து, உனது உயிர்
சிந்துமுன் என்றது, இவன் தன்னால்விரைவிற் போரிலழிவானென்ற
உறுதியைவிளக்கும்பொருட்டு.  குபேரனது பட்டணத்துக்கு
வரத்தக்கவர்களுள் சிவனைமுதல்வனாகஇச்செய்யுளிற் கூறியது, அவன்
குபேரனுக்கு உயிர்நண்ப
னாதலாலும்,மிக்கசமீபத்தில் வசிப்பவனாதலாலு
மென்னலாம்.  ஆழி-பாற்கடலென்றாவதுபிரளய ஜல மென்றாவதுகொள்க.
சுப்பிரமணியமூர்த்தி சூரபதுமனைப்பொருது அழித்தற்குச் செல்லும்
வழியிடையே கிரௌஞ்சனென்னும் அசுரன் பெரிய மலைவடிவங்கொண்டு
தம்மை நலிவதாக எதிர்வந்து நிற்க, அதன்மேல் அப்பெருமான் தமது
வேலையேவி அதனைத்துளைத்துஅழித்திட்டனரென்பது கதை.
நரவாகனன்-நரனைவாகனமாகவுடையவன்;நரன் - குபேரனது வாகனத்தின்
பெயர்.  வருவோன்நீ - வழுவமைதி.                           (528)

27.-வீமன்தன் வலிமைத்திறந் தோன்றத் தெரிவித்தல்.

என்னாவவனுரையாடலுமிவனின்புறநகையா
முன்னாளொருமலர்க்காரணமுனைவோருயிரெல்லாம்
பொன்னாடர்தமுலகிற்புகப்பொருதோனிகலடுபோர்
மன்னாகவமதியாவிறல்வயமாருதியென்றான்.

     (இ-ள்.) என்னா- என்று, அவன் - அச்சாலேந்திரன், உரை ஆடலும்
- சொன்னவளவிலே,-இவன்- இவ்வீமன், இன்பு உற நகையா - மகிழ்ச்சி
மிகச் சிரித்து, 'முன்நாள-முன்னொருகாலத்தில்,ஒரு மலர் காரணம் -
ஒருபூவின்நிமித்தமாக, முனைவோர்உயிர் எல்லாம் - எதிர்த்துப் போர்
செய்தவர்களது உயிரையெல்லாம், பொன் நாடர் தம் உலகில் புக -
பொன்மயமான மேலுலகத்தில் வாழ்கிற தேவர்களது வீரசுவர்க்கத்திலே
செல்லும்படி, பொருதோன் - போர் செய்து அழித்தவனும், இகல் அடு
போர்மன்-வலிமையாற் கொல்லுகின்ற யுத்தத்தில் வல்ல அரசனும், ஆகவம்
மதியா விறல் வய மாருதி - (பகைவரது) போரை ஒருபொருளாகக்கருதாத
வலிமையையும் வெற்றியையு முடைய வாயுகுமாரனு மான வீமன் (யான்),'
என்றான்- என்று (சாலேந்திரனைநோக்கி வீமன்) கூறினான்;(எ-று.)

     பகைவன் தன்னையிகழ்ந்தமைகாரணமாகவும்,தனக்குப்
பகைவனிடத்திலுள்ள இகழ்ச்சிகாரணமாகவும் நகைப்பு வீமனுக்குவிளைந்