பக்கம் எண் :

346பாரதம்ஆரணிய பருவம்

பலர்-மீண்டும்மிகப்பலர், பிறங்கலைநிகர்க்கும் கன்னம்மதம் மா-
மலைகளையொத்தகன்னத்தினின்று ஒழுகும் மதஜலத்தையுடைய
யானைகளும்,இரதம் - தேர்களும், கற்கி - குதிரைகளும், இகல் காலாள் -
வலிமையாகப் போர்செய்யுங் காலாட்களும், (என்னுஞ் சதுரங்க
சேனையுடனே),மன்னு திறல் மானுட மடங்கலைவளைத்தார்-பொருந்தின
வலிமையையுடைய அந்த மனிதச் சிரேஷ்டனானவீமனைச்
சூழ்ந்துகொண்டார்கள்;(எ - று.)

     பிறங்குதல் -(உயர்ச்சியால் நெடுந்தூரத்திலும்)விளங்குவது:மலைக்குப்
பெயர்:இதில், அல்-கருத்தாப்பொருள் விகுதி.  பிறங்கு அலைநிகர்க்கும்
எனப் பிரித்தெடுத்து - விளங்குகின்ற கடலின் அலைநீரையொக்கின்ற என
உரைத்து, மதத்துக்கு அடைமொழியாக்கினு மமையும்.  மதமா-
மதத்தையுடைய விலங்கு;எனவே, யானையாயிற்று. யானைக்குமலையை
உவமைகூறியதனால்,யானையின்மதநீருக்கு மலையின்அருவிநீரை
உவமையாகக் கொள்க.  இரதம் - ரதம்:கற்கி - கல்கி:வடசொற்கள்.
சிங்கம், புலி, யானை,காளைஎன்னுஞ் சொற்கள் மனிதனுக்கு
வரும்பொழுது சிறப்புப்பொருளையுணர்த்துமாதலின்,'மானுடமடங்கல்'
என்றது.  இனி, மானுடமடங்கல் - நரசிங்கமூர்த்திபோன்றவனுமாம்;
பிறப்பால் மனிதனும் பராக்கிரமத்தாற் சிங்கமும் ஆகுபவ னென்றுமாம்.(542)

41.-ஐந்துகவிகள்-விஞ்சையர் பொருதுதோற்றமைகூறும்.

வளைத்துவயவெம்படைகள்வீசிமறிகடல்போல்
உளைத்தொருவர்போலெவருமுருமெனவுருத்துப்
புளைத்தரதமாபுரவிபோதகமிசைப்போய்
விளைத்தனர்பெருஞ்சமரம்விஞ்சையர்களெல்லாம்.

     (இ - ள்.)விஞ்சையர்கள் எல்லாம் - வித்தியாதரர்களெல்லோரும்,-
புளைத்தரதம்-(இடையிலே) துவாரத்தையுடைய தேர்களும், மா புரவி-பெரிய
குதிரைகளும், போதகம்-யானைக்குட்டிகளும்என்னும் இவற்றின், மிசை
போய்-மேலேறிச் சென்று, மறி கடல் போல்-(அலைகள்)மடங்குந்
தன்மையுள்ள கடல்போல, வளைத்து-(வீமனைச்)சூழ்ந்து நின்று, உளைத்து
- மனங்கலங்கி, உரும் என உருத்து-இடி போல(ப் பயங்கரமாக) க்கோபித்து,
வயம் வெம் படைகள் வீசி - வலிமையையுடைய கொடிய ஆயதங்களை
(அவன்மேலே) எறிந்து, ஒருவர்போல் எவர்உம் - ஒருத்தரைப் போலவே
எல்லோரும், பெருசமரம் விளைத்தனர்- (அவனுடன்) பெரிய போரைச்
செய்தார்கள்;

     'உருமெனவுரைத்து' என்றபாடத்துக்கு - இடிமுழக்கம்போல
வீரவாதங்களைஆரவாரத்தோடுசொல்லி யென்க.  புளைத்த-
புளையென்னும்பெயரி னடியாப்பிறந்த பெயரெச்சம்:புளை-புழைஎன்பதன்
போலி.  போதகம்-இருபத்தைந்து பிராயமுள்ள யானைக்கன்று.

42.தேரணியும்வெம்பொறி யெனச்செறிபுகர்க்கைக்
காரணியும்வாயுநிகர் கற்கியணியும்போர்ப்