பக்கம் எண் :

348பாரதம்ஆரணிய பருவம்

கொண்டஅவ்வித்தியாதரர்களது தலைமூளையும்உடற்கொழுப்பும்
வாய்வழியாக வெளிப்படும்படி, மொய்ம்பின் முருக்குதலும்-வலிமையோடு
அழித்தவளவில்,-பொரும் பொருநர் எல்லாம்-போர்செய்கிற
வித்தியாதரவீரர்களெல்லோரும்,-தாள் உடை மருத்து எதிர் சரிக்கும் வகை
எய்தும் பூளைவனம் ஒத்தனர் - முயற்சியையுடைய பெருங்காற்றுக்கு
எதிரிலே சஞ்சரிக்கும்தன்மையைப் பொருந்தின இலவம்பஞ்சுத்தொகுதியைப்
போன்றார்கள்;(எ - று.)

    பொருங்காற்றிக்கு எதிரில் இலவம்பஞ்சு பறப்பதுபோல,
வீமனுக்கெதிரில் விஞ்சையர்கள்சிதறுண்டு பறந்தார்களென்பதாம்.
"காற்றிடைப்பூளைக்கரந்தையென வரந்தையுறக் கடலரக்கர் தம் சேனை"
என்பது மங்கைமன்னன்மொழி.  தாளுடைமருத்து-கால்களையுடையவாயு
என்று உரைத்தால், இல்பொருளுவமையாம்.  விண்டு என்றவிடத்து 'மீண்டு'
என்று பாடங்கொள்ளலாம்.  முருக்குதலு மார்பில் என்றும் பாடம்.  (546)

45.சிந்துரமணிக்கொடிகொ டேர்புரவிகாலாள்
அந்தகபுரத்தணுக லுற்றவொழியப்போய்த்
தந்தமபுரத்தணுக லுற்றனசயப்போர்
மந்தரவரைப்புயனு நின்றனன்மறத்தால்.

     (இ-ள்.)சிந்துரம் - யானைகளும்,மணி  கொடி கொள்  தேர் -
அழகியதுவசங்களைக்கொண்ட இரதங்களும், புரவி-குதிரைகளும்,
கால்ஆள-காலாட்களும், (என்னும் நால்வகைச்சேனையும்),அந்தகபுரத்து
அணுகல் உற்ற ஒழிய-(போரிலிறந்து) யமலோகத்திற்சேர்ந்தவை தவிர,
(மற்றவை),-போய்-(புறங்கொடுத்துச்)சென்று, தம் தம புரத்து அணுகல்
உற்றன - தங்கள் தங்கள் இருப்பிடத்திற் சேரத்தொடங்கின;
(அப்பொழுது),சயம் போர் மந்தரம் வரை புயன்உம்-வெற்றியைப்பெற்ற
போரைச்செய்த மந்தரமலைபோன்றதோள்களையுடையவீமனும், மறத்தால்
நின்றனன்-பராக்கிரமத்தோடு (அங்கு) நிலைநின்றான்;(எ-று.)

    மறத்தால்நின்றனன் - இங்கே, மூன்றனுருபு, அடைமொழிப்பொருளது;
மறத்தையுடையவனாய்நின்றானென்க.  தந்தம, அ - ஆறனுருபு.  புரம்-
நகரத்திலுள்ள இடங்களுக்கு இலக்கணை. இரண்டாம் அடியிலுள்ள உற்ற-
பெயர்.                                                 (547)

46.-விஞ்சையர்நிலைகுலைந்துபோனமை.

இருவரொருநீணெறி யியங்கலர்தியங்கா
வரியுழுவைகண்டுடையு மானினமதேபோல்
வெருவியுளநொந்துதிறல் விஞ்சையர்களெல்லாம்
பொருவிலளகாபுரி புகுந்தனர்விரைந்தே.

     (இ - ள்.)திறல் விஞ்சையர்கள் எல்லாம் - கொடிய வித்தியாதரர்க
ளெல்லாரும்,-வரி உழுவை கண்டு உடையும் மான் இனம் அது ஏ போல் -
(உடம்பிற்) கோடுகளையுடையபுலியைப் பார்த்துச்