கழனிகளிலேதங்கப்பெற்ற [மிக்கநீர்வளத்தையுடைய]குருநாட்டையுடைய யுதிட்டிரன், உயிர்போலும் அனுசனைஎதிர்காணான்-(தனது)உயிரையொத்த தம்பியான வீமனைஎதிரிற்காணாதவனாய்,தேவியை-(தங்கள்) மனைவியான திரௌபதியை, வினவுற்றான்-(வீமன் எங்கேயென்று) வினாவினான்;(எ-று.) இவண் -இவ்வண்ணம் என்பதன் விகாரம். அநுஜன் - பின் பிறந்தவன். முரல்சங்கம் - வினைத்தொகை.செய் - கழனி; வயலைச் செய் என்பது, அருவாநட்டார் வழங்குந் திசைச்சொல். தலை- ஏழனுருபு. குளகமாகிய 64, 65 - செய்யுள்கட்கு முடிபுவருமாறு:-(64) அரிமகனும் (65) இத்தலைஇகல்பொருது இவணின்றானுமானவய வீமன் (64) அடல் அரிநாதஞ்செய்ய, (65) நாடனதேவியை வினவுற்றான்என்பது. இதுமுதற் பதினான்குகவிகள்- முதற்சீரும் மூன்றாஞ்சீரும் விளச்சீர்களும் மற்றவை மாங்காய்ச்சீர்களு மாகிய அளவடிநான்கு கொண்ட கலிவிருத்தங்கள். (567) 66.வீமன் சென்றுள்ளசெய்தியைத்திரௌபதி தெரிவித்தல். மன்னவன்மொழிகேளா மான்மதர்விழிமானும் நன்னதிதனிலின்றோர்நறைமலரதுகாணா இன்னமுமொருகானீ யிம்மலர்கொணர்கென்றேன் அன்னவன்விசைசென்றானளகைநன்னகரென்றாள். |
(இ - ள்.)மன்னவன் மொழி கேளா - அந்தயுதிட்டிரராசனது வார்த்தையைக் கேட்டு, மான் மதர் விழி மான்உம் - மானின்விழி போன்ற களித்த விழியையுடைய திரௌபதியும், 'நல்நதிதனில் இன்று ஓர் நறை மலர் அதுகாணா-சிறந்தநதியிலேஇன்றைத்தினத்தில் வாசனையுடையதொரு பூவை (நான்) பார்த்து, இன்னம்உம் ஒரு கால் நீ இ மலர் கொணர்க என்றேன்-இன்னுமொருதரம் நீசென்று இவ்வகைப்பூவைக் கொணர்ந்துகொடுப்பாயாக என்று (நான் வீமனை)வேண்டினேன்;(வேண்ட), அன்னவன் - அவ்வீமன், அளகை நல் நகர்-சிறந்த அளகாபுரிக்கு, விசை சென்றான்-வேகமாகப்போனான்,'என்றாள்-என்றுசொன்னாள்;(எ-று.) விழிப்பது-விழி;கண்ணுக்குக் காரணப்பெயர். மான் என்னுஞ் ெொல் இரண்டனுள், முன்னது - அதன்நோக்கத்துக்கு முதலாகு பெயர்;பின்னது- பெண்ணென்னுமாத்திரையாய்நின்றது. மான்மதர் விழிமான் என்றதைக் கீழ்ப் புட்பயாத்திரைச்சருக்கத்தின் இறுதிச் செய்யுளில் "மின்புரைமருங்குல் மின்" என்றதுபோலக் கொள்க. (568) 67.-திரௌபதிவார்த்தையைக் கேட்டதும் புலம்புந் தருமனைரோமசன் தேற்ற, பின்பு தருமன் சில கூறலுறுதல். மன்றலில்குழலாடன் வாசகமெனுநஞ்சால் பொன்றினனெனமன்னன் புலம்பியபொழுதன்பால் |
|