(இ - ள்.) என- என்று, இவை-இவ்வார்த்தைகளை,பகர்ந்து-சொல்லி, இவன் -யுதிட்டிரன், இசைய-பொருத்தமாக, ஏத்தலும் - துதித்த மாத்திரத்தில், தனதன்உம் - குபேரனும், முனிவொடு - (வீமனிடத்துள்ள) கோபத்தோடு, வயிரம்உம்-வீராவேசமும், முரண்உம் - பகைமையும், மாறி - நீங்கி,-மனன் உற மகிழ்ந்து - மனம் மகிழ்ச்சிபெற்று, எதிர்கொண்டு - எதிரிற்சென்று உபசரித்து, தருமனை-யுதிரட்டிரனை,மார்பு உற - (தன்) மார்பிலே அழுந்தும்படி, தழீஇக் கொண்டான் - அணைத்துக்கொண்டான்; (எ - று.)- அரோ-ஈற்றசை. (599) 98.-தருமபுத்திரனைநோக்கிச் சினந்தணிந்தேனென்றுகுபேரன் கூறுதல். நிலத்தியறண்ணளி நிருபநீமதி குலத்தியலுடன்வரு குமரனாதலாற் சலத்தியறருமுரண் டணிந்தென்யானெனப் புலத்தியன்மகன்மகன் புகன்றுபோற்றினான். |
(இ-ள்.) 'நிலத்து- பூலோகத்துயிர்க ளெல்லாவற்றினிடத்திலும், இயல்- பொருந்தின, தண் அளி - குளிர்ந்தகருணையையுடைய,நிருப - அரசனே! நீ-, மதி குலத்து இயலுடன் வரு குமரன் - நீ சந்திர குலத்திலே (அதற்கேற்ற) நற்குணத்தோடுபிறந்த குமாரன்:ஆதலால்-, சலத்து இயல் தரும் முரண் தணிந்தென் யான்-(உன் தம்பிபக்கல்) கோபத்தாற் பொருந்தின பகைமையை யொழிந்தேன் நான்',என - என்று, புலத்தியன் மகன் மகன்- புலஸ்தியரது குமாரரான விச்சிரவசினது புத்திரனானகுபேரன், புகன்று - சொல்லி, போற்றினான்- (தருமபுத்திரனைப்)புகழ்ந்தான்;(எ - று.) சந்திரனைக்கண்டமாத்திரத்தில் உஷ்ணந்தணிதல்போலச் சந்திரகுலத்திற்பிறந்தவனானஉனது சாந்தகுணத்தைக் கண்டமாத்திரத்தில் எனது கோபதாபந் தணிந்துவிட்ட தென்பான், 'நீமதி குலத்தியலுடன்வருகுமரனாதலால்சலத்தியல்தருமுரண் தணிந்தென் யான்' என்றான். (600) 99.-உரிமைபாராட்டிக்குபேரன் தம்பிமாருடன் தருமனைத்தன் நகருக்கு அழைத்துப்போதல். என்னகர்நின்னக ரென்றுவேறிலை நின்னகரிதுமுத னீங்கள்வாழ்வுறும் தொன்னகரெனதெனத் துணைவர்தம்மொடு மன்னனைத்தன்னகர்கொண்டுமன்னினான். |
(இ-ள்.)'என்நகர் நின் நகர் என்று வேறு இலை-எனதுநகரம்வேறு நினதுநகரம்வேறு என்பதுஇல்லை;இது நின் நகர்-இவ்வளகாபுரி உன்னுடைய நகரமாம்; முதல் நீங்கள்வாழ்வு உறும் தொல் நகர்- முன்னாளில்நீங்கள் வசித்துவந்த பழமையான அஸ்தினாபுரி,எனது- என்னுடையதாம்',என-என்றுசொல்லி, (குபேரன்), துணைவர்தம் |