(தனக்குக்) கொடுத்தஆடைகளைக்கொடுத்து, மதி முத்தம் வெள்குடை கொடுத்து - பூர்ணசந்திரன் போன்ற வெண்ணிறமான முத்துக்குடையைக் கொடுத்து, நவ மண கொடுத்து - நவரத்தினங்களையுங்கொடுத்து, அமரில்என்றுஉம் வென்றிதரு கொற்றம் வெம்படை கொடுத்து-போரில் எப்பொழுதுஞ்சயத்தைத்தருகிற வலிமையையுடைய பயங்கரமான சிலஆயுதங்களையுங்கொடுத்து, உயர்பதம் கொடுத்து-சிறந்தபெயரையுங் கொடுத்து, அனந்தரம்-பின்பு, மிகு பரிவுடன் - மிகுந்த அன்புடனே, விடை கொடுத்தனன் - (அவனுக்கு மீண்டுசெல்ல) அநுமதியுங் கொடுத்தான்; (எ-று.) 'அளகைநாதன்அன்றுதவு'என்பதைத் தொடை, முத்துக்குடை, நவமணி என்பவற்றிற்குங் கூட்டுக;இவையெல்லாம், கீழ் 101-ஆம் கவியிற்கூறியபடி குபேரனால்தருமனுக்குக் கொடுக்கப்பட்டனவாம். இப்பொருள்கள்யாவும் கடோற்கசன் தனது தேரின் மீது தருமனை அழைத்துக்கொண்டு போனதுமூலமாக வந்த பொருள்களாதலாலும், வனவாசஞ்செய்யுந் தருமனுக்கு இவை வேண்டா வாதலாலும், இவற்றைத் தருமன் கடோற்கசன் செய்த உதவிக்குஏற்ற பரிசு ஆகக் கொடுத்தான். (612) 111.-கடோற்கசன்யுதிட்டிராதியரை வணங்கி இடிம்பவனஞ்சேர்தல். வணங்கியன்புடன்மகிழ்ந்துமன்னரை வலம்புரிந்துமனனஞ் செயா, நிணங்கமழ்ந்தொழுகிவழியவாளெயிறு நிலவெழும்புகை கொள்வாயினான், துணங்கைகொண்டலகைகோடிவானின்மிசைதுள்ளியூரு மிரதத்தின்மேல், இணங்கிமீளவும்விநாழிகைப்பொழுதினில்லிடிம்பவன மெய்தினான். |
(இ-ள்.)நிணம் கமழ்ந்து ஒழுகி வழிய -(தின்னப்படுந்) தசையின்நாற்றம்வீசிச் சிந்திப்பெருக, வாள் எயிறு நிலவு எழும்-கூர்மையான கோரதந்தங்களினின்றும் நிலாப்போன்ற வெள்ளொளி விளங்கப்பெற்ற, புகை கொள் வாயினான்-(கோபாவேசத்தாற்)புகையைக் கொண்ட வாயையுடைய அக்கடோற்கசன்,-அன்புடன் - பக்தியுடனே, மகிழ்ந்து - மகிழ்ச்சியுற்று, மன்னரை-(யுதிட்டிரன்முதலிய பாண்டவ) அரசர்களை,வணங்கி - நமஸ்கரித்து, வலம் புரிந்து - பிரதக்ஷிணஞ் செய்து, மனனம் செயா - தியானித்து, அலகை கோடி துணங்கை கொண்டு துள்ளி வானின் மிசை ஊரும் இரதத்தின்மேல் இணங்கி - அநேகம்பேய்கள் துணங்கை யென்னுங்கூத்தையாடிக் கொண்டு (உற்சாகத்தால்) துள்ளிக்கொண்டு ஆகாசமார்க்கத்திலே சுமந்துசெல்லப்பெற்ற (தனது) தேரின்மேற் பொருந்தி, மீளஉம்-மறுபடியும், விநாழிகை பொழுதினில் - ஒருவிநாடிப்பொழுதிலே, இடிம்பவனம் எய்தினான்- (தனதுவாஸஸ்தாநமான) இடிம்பாரணியத்தை யடைந்தான்;(எ - று.) துணங்கைக்கூத்தாவது-இரண்டு கைகளையும்முடக்கி விலாப்புறத்திலேயொற்றி ஆடுவது;"முடக்கியவிருகைபழுப்புடை |