பக்கம் எண் :

துருவாசமுனிச்சருக்கம்389

4.-முனிவனைநீராடிவருக என்று அனுப்பிவிட்டு,
'இவனைஉண்பிக்க யாது செய்வது?'என்று
யுதிட்டிரன்ஆலோசித்தல்.

மூத்தோன்குளித்துவருகவென முனிவருடனம்முனிதடத்துப்,
போய்த்தோய்வதற்காங்கெழுந்தருளப் புரசைக்களிற்று
                                முரசுயர்த் தோன்,
வாய்த் தோன் வரவுக்கென்புரிவோ மதிப்பீரெனத்தன்றம்
                                     பியர்க்கும்,
வேய்த்தோள்வேள்விமடந்தைக்கு முரைத்தாங்கவரை
                                  வினவினனால்.

     (இ-ள்.)மூத்தோன்-பாண்டவர்களுட்பெரியோனானதருமபுத்திரன்,
'குளித்துவருக- நீராடிவருவீராக,'என - என்றுகூறவே,-ஆங்கு-
அப்போது, அ முனி - அந்தத் துருவாசமுனிவன், முனிவருடன்-
(தம்முடன்வந்த) இருடியரோடும், தடத்து போய் - நீர்நிலையிருக்குமிடஞ்
சென்று, தோய்வதற்கு-நீராடுவதற்காக, எழுந்தருள-சென்றிருக்க,-
புரசைகளிறு -புரசையையுடைய மதயானைச்சேனையையுடையனாகி,முரசு
உயர்த்தோன் - முரசவாத்தியத்தை(க் கொடியில்) உயரவெழுதியவனான
யுதிட்டிரன்,-'வாய்த்தோன்- தவவாய்ப்பையுடையவனானதுருவாச
முனிவனுடைய, வரவுக்கு-(உண்ணுமாறு) வரப்போவதற்கு, என் புரிவோம் -
(யாம்) என்னசெய்வோம்?  மதிப்பீர் - ஆலோசிப்பீராக,'என - என்று,
தன் தம்பியர்க்குஉம்-தனது தம்பிமாரானவீமன் முதலியோரிடத்தும், வேய்
தோள் வேள்வி மடந்தைக்குஉம்-மூங்கில்போன்ற தோள்களையுடையவளாய்
வேள்வித்தீயினின்று தோன்றியவளான திரௌபதியினிடத்தும், உரைத்து-
சொல்லி, ஆங்கு-அங்கே, அவரை-,வினவினன்-உபாயங்கூறுமாறு
கேட்டான்;(எ-று.)

    உணவுக்காலம்என்று துருவாசமுனிவன் கூறியவுடனே, நீராடி வருக
என்று தந்திரமாக அனுப்பிவிட்டு, யுதிட்டிரன் 'நீராடிவந்தால்
இம்முனிவர்க்கு எவ்வாறு உணவுஇடுவது?'என்று சிந்தை கொண்டவனாய்,
இம்முனிவனுக்கு உணவுஇட என்னஉபாயஞ்செய்யலாமென்று
ஆலோசித்துக்கூறுமாறு தன் தம்பிமார் முதலியோரை வினாவினனென்க.
ஆல்-அசை. புரசை - யானைக்கழுத்திடுகயிறு.மதியீரென்றும் பாடம். (618)

5.-வீமன்தன்கருத்தைக் கூறுதல்.

மேவாருரைக்கவிவன்வந்த தல்லாற்பிறிதுவேறில்லை
ஆவாவிதற்கின்றென்செய்வே மாமாறாகநாமெழுந்து
கோவானவனும்பலபடையுங்குன்றச்சென்றுபொருதிமைப்பில்
சாவாநிற்பதுறுதியினி யென்றான்வன்றாட்சமீரணியே.

     (இ-ள்.)(அதுகேட்டதும்),-வன்தாள் சமீரணி - கொடிய
முயற்சியையுடைய வாயுகுமாரனானவீமசேனன்,-'மேவார்-(தமது)பகைவர்,
உரைக்க - சொல்ல, (அச்சொல்லைக்கேட்டுக்கொண்டு), இவன்வந்தது
அல்லால்-இம்முனிவன் வந்தானேயல்லாமல், (இவன் வருவதற்கு), வேறு
பிறிது-வேறாகமற்றொருகாரணம்,இல்லை;ஆஆ-