அவனைவிரைவில்வர வழையுங்களென்றான். ஒத்தோரில்லா எனவே, மிக்கோரில்லாமைபெறப்படும். சாபத்தினால்இரட்டைமருதமாகிக் கிடந்த குபேரபுத்திரர்களின் சாபத்தை நீக்க ஸ்ரீக்ருஷ்ணன் அவற்றினிடையே தவழ்ந்தானென்க. (620) 7.-சகதேவன் கூறியஉபாயச்சொல். யாதேயாகவிந்தவிபத் தேகம்பொழுதைக்கிசையளிகள் தேதேயென்னும்பசுந்துளபத் திருமாறன்னைச்சிந்தியுமிப் போதேவருமிங்கவன்வந்தாற் போமிக்கவலையெனப்புகன்றான் சாதேவனுமங்கவனிசைத்த சொல்லுக்கிசைந்தான்றருமனுமே. |
(இ - ள்.)சாதேவன்உம்-, 'இந்தவிபத்து-இப்போது(நமக்கு) வரக்கடவ ஆபத்து, யாதுஏ ஆக - எதுவாகவிருந்தாலும் இருக்கட்டும்:ஏகும் பொழுதைக்கு - (இது) செல்லும் போதுக்கு [நீங்கவேண்டமேயானால் என்றபடி],இசை அளிகள்-பாடல்பாடும் வண்டுகள், தே தேஎன்னும்- தேதேஎன்று ஒலிக்கின்ற, பசுந் துளபம்-பசிய திருத்துழாயையணிந்த, திருமால் தன்னை- திருமாலினவதாரமாகிய க்ருஷ்ணனை,சிந்தியும் - தியானியுங்கள்:(சிந்தித்தால்), அவன் இங்கு இப்போதுஏ வரும் - அத்திருமால் இவ்விடத்து இப்போதே வருவான்:வந்தால்-(அங்ஙன்) வருவானாயின்,இ கவலைபோம்-இந்தக்கவலைநீங்கும்,'என - என்று, புகன்றான்- (தன் ஆலோசனையைக்)கூறினான்:தருமன்உம் - தருமபுத்திரனும், அங்கு-அப்போது, அவன் - அந்தச் சகதேவன், இசைத்த - சொன்ன, சொல்லுக்கு-, இசைந்தான் - உடன்பட்டான்;(எ - று.) நகுலன்ஸ்ரீக்ருஷ்ணனைவிரைந்துவருமாறு அழையுங்களென்று சொல்ல, சகதேவன் 'அவ்வமலன்நினைத்தமாத்திரத்தில்இங்குவந்திடுவான்: வந்திட்டானாயின்,எதுவாயிருந்தாலும்விபத்து 'நீங்கும்என்றனனென்பதாம். நடந்து செல்லும்போது மார்பின்மாலைசலிக்குமாதலால், அப்போது மாலையில்மொய்த்திருக்கும் வண்டுகள் எழுந்து தேதேயென்று ஆளத்திவைக்கு மென்க. (621) 8.-திரௌபதி'முனிவன்வந்திடுவானே:என்செய்வது?' என்றுநடுங்கிநிற்றல். என்னேயென்னேயாதவன்வானிடையுங்கடந்தான்முனிவன்வரும் முன்னேநுகர்ந்தாஞ்சாகபல மூலம்பலபேர்முனிவரொடும் கொன்னேமுனியுமுனிக்கினியென் கொல்லோபுரிவதெனநின்ற மின்னேரிடையாணடுநடுங்கிவிளைவதென்னோவெனப்பயந்தாள். |
(இ-ள்.)நின்ற மின் நேர் இடையாள் - நிலைத்துநிற்பதொரு மின்னலுக்கு உவமையான இடையையுடைய திரௌபதி,-'ஆதவன் - சூரியன், வான் இடைஉம் கடந்தான் - ஆகாயத்தின்நடு விடத்தையுங் கடந்திட்டான்:[உச்சிப்போதும்கழிந்திட்டதென்றபடி]:முனிவன் வரும் முன்னே - இந்தத் துருவாசமுனிவன் (நம்மிடத்துக்கு) வருவதற்குமுன்னமே, பல பேர் முனிவரொடுஉம் - பல |