பக்கம் எண் :

பழம்பொருந்துசருக்கம்399

    முதற்பதின்மூன்றுகவிகள்-முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும்,
மற்றவை மாச்சீர்களுமாகிவந்த கழிநெடிலடிநான்கு கொண்ட
அறுசீராசிரியவிருத்தங்கள்.                                 (632)

2.-இந்தக்கனியைஎனக்குத் தரவேண்டுமென்று
திரௌபதிஅருச்சுனனிடங் கூறுதல்.

இக்கனியெனக்குநீநல் கென்றுவில்லெடுத்துக்கொண்ட
மைக்கனிக்களவுமானும் வடிவுடைவிசனோடும்
மெய்க்கனிவுடைமைதோன்ற விளம்பினாள்வீசுதென்றன்
முக்கனிகமழுஞ்சோலைமுகிறவழ்நாடன்பாவை.

     (இ - ள்.)வீசு தென்றல்-வீசுகின்ற தென்றற்காற்றானது,மு கனி
கமழும்-(வாழை மா பலாஎன்ற) மும்மரங்களின்பழங்களுடைய
நறுமணங்கமழ்வதற்குக்காரணமான, சோலை-சோலைகளிலே,முகில் தவழ்-
மேகங்கள்படிந்துசெல்லப்பெற்ற, நாடன்-பாஞ்சாலநாட்டிற்கு
உரியதுருபதமகாராசனுக்கு, பாவை-பெண்ணானதிரௌபதி,-வில்
எடுத்துக்கொண்ட - வில்லைத்தாங்கிக்கொண்டுள்ள,மை - மேகத்தையும்,
களவுக்கனி - களாப்பழத்தையும், மானும்-ஒத்த, வடிவு உடை - கறுத்த
வடிவத்தையுடைய, விசயனோடுஉம்-அருச்சுனனுடனே,மெய்-(தன்)
மனத்திலே, கனிவுஉடைமை-விருப்பமுடைமை, தோன்ற-விளங்குமாறு, 'நீ-,
இ கனி எனக்கு நல்க-இந்தநெல்லிக் கனியை எனக்குத் தருக,'என்று-,
விளம்பினாள்- சொன்னாள்;

    மெய்க்கனிவு-உண்மையான விருப்பமுமாம்.  முக்கனி-தொகைக்குறிப்பு.
வில்லிறுத்துக்கொண்ட என்று பிரதிபேதம்.                       (633)

3.-அருச்சுனன்அந்தக்கனியைவிற்கணையால்எய்து
வீழ்த்தித்திரௌபதிக்குத் தருதலும், கண்டவர் 'இறுத்
தோனுக்கு என்னஆபத்துநேருமோ?'எனல்.

சோமகர்க்கரசன்பாவை சொல்லுமுன்வில்லுவாங்கி
மாமுனிக்குணவாய்நின்ற மதுரவாமலகந்தன்னை
ஏமுறைதொடுத்துவீழ்த்தி யீதலுமாங்கட்கண்டோர்
ஏமுறக்காணிலிப்போ தென்படுமிறுத்தோனென்றார்.

     (இ-ள்)சோமகர்க்கு அரசன்பாவை - சோமகரென்பார்க்கு அரசனான
துருபதனடைய மகளானதிரௌபதி, சொல்லும்முன்-('இதனைஎனக்குத்தருக'
என்று)சொல்லுவதற்குமுன்னே[சொன்னவுடனேஎன்றபடி],- (அருச்சுனன்),-
மா முனிக்கு - சிறந்த அமித்திரனென்னும் முனிவனுக்கு, உணவு ஆய்நின்ற-
உணவாகவிருந்த, மதுரம் ஆமலகந்தன்னை-இன்சுவையுள்ள
நெல்லிக்கனியை, வில்லு வாங்கி-வில்லைவளைத்து,ஏ முறை தொடுத்து-
அம்பைத்தொடுக்க வேண்டிய முறையிலே எய்து, வீழ்த்தி -
(அந்தமதுரநெல்லிக்கனியை மரத்தினின்று) வீழச்செய்து, ஈதுலும் -
(திரௌபதிக்குக்) கொடுத்தவுடனே,-ஆங்கண் - அவ்விடத்து, கண்டோர் -
(அச்