(தன்னில்இடப்பட்ட)பொருளால், ஆர் அழல்-நிரம்பிய அக்கினியானது, வளர்ந்து-, கோளகையூடு - வானமண்டலத்தினிடையே, உறும்படி - போய்ப்பரவும்படி, ஓமகுண்டம் எ அளவு - ஓமகுண்டம் எவ்வளவு பரப்பாகவுள்ளதோ, அ அளவு-அவ்வளவுக்கும், (எரிவதற்கேற்ற), இந்தனம்- விறகுகளை,கொடுந் தருக்களில்-வளைவாய்வளருந்தன்மையுள்ள மரங்களிலிருந்து, சேர்த்தான்-;(எ - று.) அக்கினிச்சுவாலைஓங்கிவளரும்படி ஓமகுண்டம் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு விறகுகளையும்அக்குண்டத்திற் சேர்த்தன னென்பதாம். கொடுந் தருக்கள்-வேம்புபோல்வன என்றலும் உண்டு. (667) 14.-முனிவன்வேதமந்திரத்தோடு நெய்வார்த்து ஓமஞ்செய்தல். மிக்கமந்திரயாமள முதலியவேதமந்திரந்தம்மில், தக்கமந்திரந்தெரிந்துகொண் டாசறுசடங்கமுந்தப்பாமல், தொக்கமந்திரமொன்றினுக்கோரெழுசுருவையின்றுநெய்வார்த்து, ஒக்கமந்திரமனைத்தினுங்கொடுமைகூரோமமும்புரிந்தானே. |
(இ - ள்.)வேதம்மந்திரம் தம்மில் - வேதமந்திரங்களுக்குள்ளே, தக்க - (கருதியபயனைவிளைக்குந்)தகுதியுள்ள, மந்திரம்-மந்திரமாகி, மிக்க - (அபிசாரத்துக்கு) மேம்பட்ட, யாமளம் முதலிய மந்திரம் - யாமளம் முதலியவற்றிலுள்ள மந்திரங்களை,தெரிந்துகொண்டு-,-ஆசு அறு-குற்றமற்ற, சடங்கம்உம்-(அவ்வேள்விக்குஉரிய) சடங்குகளும், தப்பாமல் - தவறாதபடி (இயற்றி), தொக்க-கூடிய, மந்திரம் ஒன்றினுக்கு - ஒருமந்திரத்துக்கு, ஓர் எழு சுருவையின் நறுநெய் வார்த்து - ஓரேழுதரம் நெய்த்துடுப்பினால் நறுமணமுள்ள நெய்யை ஓமஞ்செய்து, ஒக்க மந்திரம் அனைத்தின்உம்- (அபிசாரத்துக்கு) ஏற்றனவான மந்திரமெல்லாவற்றிலும், கொடுமை கூர் - கொடுமை மிகுந்த, ஓமம்உம்-ஓமத்தையும், புரிந்தான்-செய்தான்;(எ - று.) யாமளம்என்பது, அதர்வணவேதத்தின் பகுதியானதென்பர்;அது, அபிசாரம்முதலியசடங்குகளுக்கு எடுத்தது. அபிசாரசடங்குக்குத் தப்பாதபடி சேர்ந்துள்ள மந்திரம்என்றுமாம். ஒரு அபிசாரமந்திரத்துக்கு ஏழுமுறை நெய்த்துடுப்பினால்நெய்வார்த்து மந்திரோச்சாரணத்துடன் ஓமமும்செய்தா னென்பது பின்னிரண்டிடயிற் கூறிய பொருள். (668) 15.-அவ்வோமத்தீயினின்று ஓர்பூதம்தோன்ற முனிவனும் உடல் குலைதல். தன்றனிச்சையினன்றியேழ் கடலுடைத்தராதலந்தனையாளும், மன்றனிச்சையிற்புரியுமவ் வேள்வியின்வந்துறுபெரும்பூதம், சென்றெயிற்றிளநிலவெழத்துணைவிழித்தீயெழுவெயில்வாய்கார்க், குன்றெனப்பொலிந்தெழுந்ததுமுனிவனுங்கூசிமெய்குலைந்திட்டான். |
|