களைத்துரியோதனன்எண்ணப்படி பூதத்தால் அழிந்திடாதவாறுயமதருமன் தப்பச்செய்தலைமேலே காண்க. யமதருமராஜனும்உலகிலுள்ளாரை அவரவர்கள்செய்த தீவினைக் கேற்பப் பட்சபாதமில்லாமல் தண்டித்துத் தருமத்தை நிலைநாட்டுபவ னாதலால்,அக்கடவுளை'மும்மைப்புவனங்களுங்காக்கும்தப்பாவாய்மை யறக்கடவுள்'என்றாரென்னலாம். முதலிரண்டடிகள்-கவிக்கூற்று. உரைப்பாம் - கவிகட்குஉரிய தனித்தன்மைப்பன்மை. ஓமம்=ஹோமம்:அக்கினியில் அவிசுசொரிதலையுடையவேள்விக்கு, ஆகுபெயர். எழுப்ப-செயவென்னும் வாய்பாட்டு வினையெச்சம்: 'எழு' என்பதன் பிறவினையான 'எழுப்பு' - பகுதிவனசரிதர் என்ற வடசொற்றொடர் - காட்டிற்சஞ்சரித்தலையுடையவர் எனக் காரணப்பொருள்படும். ஐவர் - தொகைக்குறிப்பு. வனசரிதர்ஐவர் - வனசரிதராகிய ஐவர் என இருபெயரொட்டுப் பண்புத்தொகை. அறம் பொருள் இன்பம் என்ற மூன்றும் 'முப்பால்'எனப்படும். மும்மைப் புவனம் என்றவிடத்து, மும்மையென்பது - எண்ணின் தன்மையைக் காட்டாமல் "தெரிமாண்டமிழ்மும்மைத்தென்னம் பொருப்பன்" என்றஇடத்துப்போல எண்ணின்மேல் நின்றது. தீவினைசெய்வோர்களைத்தண்டித்துத் தருமத்தை நிலைநாட்டுதலால், யமதருமராஜன் 'அறக்கடவுள்'எனப்படுவான். அறிந்தான்-முற்றெச்சம். இதுமுதல்ஆறுகவிகள் - பெரும்பாலும் மூன்று ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றை நான்கும் மாச்சீர்க்ளுமாகிவந்த கழிநெடிலடி நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள். (670) 17.-பாண்டவரிருக்கும் வனத்தில் பார்ப்பனச்சிறுவனது மான்தோலைஒருமான் எடுத்துச்செல்லுதல். தன்மைந்தனுமத்தம்பியருஞ் சரியாநின்றதபோவனத்து, நன்மைந்தரிலோர்முனிமைந்தனன்னூலுடன்பூணசினத்தை, வின்மைந்தரையுமதியாமல் விரைந்துள்புகுந்துவிசைத்தகல்வான், தொன்மைந்தனைப்போலோருழைகொண்டோடிற்றென்னாற் சொலவுண்டோா |
(இ - ள்.)தன் மைந்தன்உம்-தனது புத்திரனாகியயுதிஷ்டிரனும், அ தம்பியர்உம்-(வீமன் அருச்சுனன் நகுலன் சகதேவன் என்ற அவனுடைய) அந்தத் தம்பிமார்களும், சரியாநின்ற சஞ்சரித்துக்கொண்டிருக்கிற, தபோவனத்து - (அந்தத்) தபோவனத்துள் (வாழ்கின்ற), நல் மைந்தரில்- அழகியமைந்தர்களுக்குள், ஓர்முனிமைந்தன் ஒரு ரிஷிகுமாரன், நல் நூலுடன்-(தனது) அழகிய பூணூலுடனே, பூண்-தரித்துக்கொண்டிருந்த, அசினத்தை-மான்தோலை,ஓர் உழை-ஒருமானானது,வில் மைந்தரைஉம்- வில்வீரராகிய பஞ்சபாண்டவரையும், மதியாமல்-இலட்சியஞ் செய்யாமல், விரைந்து உள்புகுந்து - வேகமான உள்ளேசென்று, கொண்டு- கவர்ந்துகொண்டு, அகல் வான் தொல்மைந்தனைபோல். |