பக்கம் எண் :

44பாரதம்ஆரணிய பருவம்

                                        யுடன் குளிர்ந்து,
புள்ளுடைக்கொடியோரிருவருங்காணாப் புண்ணியன்பொருப்பிடைத்                                             தவஞ்செய்,
வள்ளலொத்தனவச்சாரலைச் சூழ்ந்து வயங்குநீள்வாவியுஞ்சுனையும்.

     (இ-ள்.)அ சாரலை சூழ்ந்து வயங்கு - அந்தக்கைலைமலைச்சாரலைச்
சுற்றி விளங்குகின்ற, நீள் வாவிஉம் சுனைஉம் - நீண்டநீர்நிலைகளும்
சுனையும்,-உள்உற - உள்ளே பொருந்த, கலக்கம் அற - கலக்கம்நீங்க,
தெளிந்து-, அசலத்து - மலையின், உயர் தலை முழையில்நின்று-
ஓங்கியசிகரத்தின் முழைஞ்சிலிருந்து (பெருகுகின்ற),அருவி வெள்ளம் ஒத்து
- அருவிப்பெருக்குப் பெருகுவதைப் போன்று, அமுதம் கரை அற பொழிய
- அமுதத்தை(ச்சிரசினின்று)எல்லையில்லாமற்பொழிய, வெம்மை அற்று -
வெப்பம் நீங்கி, அளியுடன்குளிர்ந்து - கருணையோடு குளிர்ச்சிபெற்று, புள்
உடை கொடியோர் இருவர்உம் - அன்னத்தையும் கருடனையும்
கொடியிலேயுடையரான பிரமவிஷ்ணுக்களென்ற இரண்டுதேவர்களும், காணா
- காணமாட்டாத, புண்ணியன் - புண்ணியமூர்த்தியாகிய சிவபிரானது,
பொருப்பிடை - கைலாசமலையிலே, தவம் செய் -
(சிவபெருமானைநோக்கித்)தவஞ்செய்கின்ற, வள்ளல் ஒத்தன-
உதாரகுணமுள்ளவனான அருச்சுனனையொத்தன; (எ-று.)      

     தவஞ்செய்யும் அருச்சுனன் அங்கியாற்சிரசிலிருந்து மதியமுதம்பெருக
அதுவே உணவாகக்கொண்டு உடல்குளிர்ந்து, தவஞ்செய்யும்
யோகியாயிருப்பதுபோல, அம்மலைச்சாரலிலுள்ள  வாவியும் சுனையும்
மலைச்சிரசிலிருந்து பெருகும் அமுதம்போன்ற நீரால் நிரம்பி
வெம்மையறக்குளிர்ந்திருந்தன: அன்றியும், அவை
உள்ளுறக்கலக்கமறத்தெளிந்திருந்தன என்க: இதுவும்-சிலேடைமூலமாக
வந்த தற்குறிப்பேற்றவணியே.  அருச்சுனனைக் குறிக்கும்போது அசலத்துயர்
தலைமுழை என்பதற்கு - அசைவில்லாத உடலின் உயர்ந்தசிரத்திலுள்ள
பிரமரந்திரம் என்க.  தாமே முதற்கடவுள் என்று பிணக்குக்கொண்ட
அரிபிரமற்குஇடையே சிவபெருமான் அனற்பிழம்பு வடிவாய்த் தோன்றி
இதன் அடிமுடிகண்டவரே முதல்வரென்ன, பிரமன் அன்னப்பறவையுருவாய்
விண்பறந்தும் அரி வராகவடிவாய் மண்ணிடந்தும் அடிமுடியைக்
காணாதவராயினரென்பது, வரலாறு.  இந்த வைணவ நூலாசிரியர்
"ஓரேனந்தனைத்தேடவொளித்தருளுமிரு பாதத் தொருவன்" எனக் கூறி
யிருத்தலும் காண்க.                                         (57)

58.- அருச்சுனன்வளர்த்த செந்தழலின் சிறப்பு.

நீறுபட்டிலங்குமெய்ந்நிலவொளியானெஞ்சினிலிருளினையகற்றி,
மாறுபட்டிடுமைம்புலன்களுமொடுக்கு மாதவன்வளர்த்த
                                     செந்தழ லாற்,
கூறுபட்டுமையோடொருவடிவானோன்குன்றுசூழறைபொறை
                                       யனைத்தும்,
மாறுபட்டுருகிப்பெருகியோடினவா லம்மலைவெள்ளியா
                                        தலினால்.

     (இ-ள்.)நீறு - விபூதி, பட்டு-பூசப்பட்டு, இலங்கும்-விளங்குகின்ற,
மெய்-(அருச்சுனனது)உடம்பின், நிலவு ஒளியால் - வெண்