பக்கம் எண் :

440பாரதம்ஆரணிய பருவம்

யாண்டுஉம் துப்பு இலாவெப்பம் தன்னால்-எங்கும்(தனக்கு)ஒப்பில்லாத
வெப்பத்தினால்,இறந்தனன்-உயிர்ஒடுங்கினான்போலும்;இங்கு-இப்போது,என்
செய்வேன்-என்னசெய்யவல்லேன்? என்று என்று எண்ணி-
என்றுஇவ்வாறுபலமுறை ஆலோசித்து,-(பின்பு அந்தப் பூதம்),-நிறைந்த நீர்
சுனையின்- நிறைந்த நீரைக்கொண்டசுனையின்கரையில், மற்றை நிருபர்
நால்வரைஉம் காணா- தருமபுத்திரனினும் வேறான(வீமன்முதலிய) நான்கு
ராஜகுமாரர்களையுங்கண்டு,-  (எ-று.)  இச்செய்யுளிலுள்ள 'காணா'
என்றஉடன்பாட்டெச்சம், நாற்பத்தோராங்கவியில், 'என்றுமூண்டுமீண்டு'
என்று தொடரும்.

     தருமபுத்திரன்தனியே உயிரொடுங்கி வீழ்ந்துகிடந்ததைக் கண்ட பூதம்,
தம்பிமார்கள் இவனைவிட்டுத் துறந்துசென்றாரென்றும், வெப்பத்தினால்
இந்தத்தருமபுத்திரனும் இறந்திட்டா னென்றும் முதன்முதல் கருதிற்று;பின்பு,
பாண்டவரைக் கொல்லுமாறு வந்த தாதலால், 'பாண்டவர்களுள்மூத்தவனான
தருமபுத்திரன் இறந்துவிட்டானாக,மற்றை நால்வரையாவது கொல்வோ
மென்றால்அவர்களும்இவனைவிட்டுச்சென்றனரே! இப்போது யான்
என்செய்வது?'என்று பெரிய விசாரம் அடைந்துதிரிந்தது:அந்தநிலையில்,
பின்பு சுனைக்ரையில்,வீமன்முதலிய நால்வரும் இறந்து வீழ்ந்து
கிடத்தலைக்கண்ட தென்க.  உடம்பின்நிழல் அதனைவிட்டுநீங்காது
உடனிருத்தல்போல்வீமன்முதலிய நால்வரும் தருமபுத்திரனைவிட்டுநீங்காது
உடனிருப்பவ ராதலால், 'மெய்ந்நிழல்போற்சூழுந் துணைவர்'என்றது.(693)

40.-பாண்டவர்கள்மாண்டுகிடந்தமைக்குப் பூதம்
வருந்துதல்.

பச்செனும்புனலான்மிக்க பங்கயச்சுனையுங்கொல்லும்
நச்சுவெஞ்சுனையேபோலும்நால்வருஞ்சேரமாண்டார்
இச்சுனையருந்திப்போலுமென்னினைந்தேதுசெய்தார்
நிச்சயங்கொடிதுகெட்டே னிந்தநிட்டூரமென்னோ.

     (இ - ள்.)பச்செனும் புனலால்-குளிர்ந்திருக்கிற நீரினால்,மிக்க-
மிகுந்துள்ள, பங்கயம் சுனைஉம்-தாமரையையுடையஇந்தச்சுனையும்,
கொல்லும்-(மனிதர்களைக்)கொல்லுகின்ற,நஞ்சு-விஷத்தோடுகூடிய, வெம்
சுனையேபோலும்-வெப்பமுள்ள சுனையென்றேதோன்றுகிறது:நால்வர்உம் -
(வீமன்முதலிய)நால்வரும், சேர-ஒருசேர, மாண்டார்-இறந்திட்டார்:
(அங்ஙனம் இறந்தது),  இ சுனை-இந்தச்சுனைநீரை, அருந்தி போலும்-
பருகியதனால் நேர்ந்ததுபோலும்: என் நினைந்து ஏது செய்தார்-எந்தச்
செயலையெண்ணி ஏதுசெய்தார்கள்
?கொடிது-(இப்போது நிகழ்ந்த
செயல்)கொடுமையானது:  நிச்சயம்-திண்ணம்: கெட்டேன்-; இந்த நிட்டூரம்-
இந்தக்கொடுமைநிகழ்ந்தது,என்னோ-எவ்வாறோ?(எ-று.)-பாண்டவர்நால்வர்
சுனைக்கரையில்இறந்து கிடத்தலைக்கண்டதும் பூதம் தன்னுள்நினைப்பதை,
"பச்செனும்"என்றஇச்செய்யுள் தொடங்கி,அடுத்தசெய்யுளில்"கேவலம்
அல்ல"என்பதுவரையிலுள்ள பகுதி தெரிவிக்கும்.