பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்47

கயிலை அம் கிரியின் சாரல்ஓ- (இது)அழகிய கயிலை மலையின் சாரலோ,
(அன்று): எம் ஊர் கடவுள் ஆலயம் - எமது ஊராகிய தேவர்களின்
இருப்பிடமே (இது),என-என்றுசொல்லி, களிப்பார்-மகிழ்ச்சிதோன்றச்
சிரிப்பார்; (எ-று.)

     இனி, கயிலையங்கிரிச்சாரலோ எம்மூர்க் கடவுளாலயம் என்று
சொல்லிக் களிப்பாரெனினுமாம்.  விடர்-குகை.  முழுத வண்சிலம்பும்
என்றும் பாடம்.                                      (61)

62.கூந்தன்மாமுகிலைக்குலைத்துடன் முடிப்பார் குங்குமங்
                        கொங்கைமேலணிவார்,
ஏந்துபேரல்குற்கலை நெகிழ்த்துடுப்பாரிட்டவுத் தரிய
                               மாற்றிடுவார்,
பூந்துகினனையநறுஞ்சுனைபடிவார் புழுகுசந்தன
                                நறும்பனிநீர்,
காந்திகொடெறிவார்காமவேதத்தைக் கருங்கடைக்
                        கண்களான்மொழிவார்.

     (இ-ள்.)கூந்தல் மா முகிலை - கூந்தலென்று சொல்லப்படுகின்ற
கரியமுகிலை, குலைத்து - அவிழ்த்து, உடன் முடிப்பார் - உடனே
முடிப்பார்கள்: குங்குமம் - குங்குமக்குழம்பை, கொங்கை மேல் - (தமது)
தனங்களின்மீது, அணிவார்-;ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து -
ஏந்திய பெரிய அல்குலைச்சூழ்ந்துள்ள ஆடையைச் சிறிது அவிழ்த்து,
உடுப்பார் - (மீண்டும்)உடுத்துக்கொள்வார்கள்: இட்ட உத்தரியம் - மேலே
போட்டுக்கொண்டுள்ள மேலாடையை, மாற்றிடுவார்-எடுத்து வேறொரு
மேலாடையை யணிவார்: பூந் துகில் நனைய-(தமது)அழகிய
அரையாடைநனையும்படி, நறுஞ்சுனை படிவார்-நறிய சுனைநீரிலே
முழுகுவார்: புழுகு சந்தனம்-புழுகு கலந்த சந்தனத்தையும், நறு பனிநீர்-
நறுமணமுள்ள பனி நீரையும், காந்தி கொடு-(உடம்பிற்)பேரொளிதோன்ற,
எறிவார்-ஒருவர்மீது ஒருவர் வீசுவார்கள்: காமவேதத்தை-,கருங்கடைக்
கண்களால் மொழிவார்-;(எ-று.)  

     பூந்துகில் நனையச்சுனையிற்படிந்தது-தமது அவயவம் தோன்றிக்
காதலை மூட்டுதற்கு.  காமவேதத்தைக் கடைக்கண்களால் மொழிதலாவது-
காமக்குறிப்புப்படப் பார்த்தல்.                                 (62)

63.பண்ணுடையெழாலினின்னிசைவழியே பாடுவார்பைங்
                             குழல்குறிப்பார்,
பெண்ணுடைமடநாணகன்றபேரமளிப் பேச்செலாம்
                          பேசிவந்தடுப்பார்,
விண்ணுடையமிர்தம்பருகுவாருகிரான் மென்மலர்
                       கொய்துமேலெறிவார்,
எண்ணுடைமடவார்புரிந்தனவிவ்வா றிங்கித
                           மெத்தனைகோடி.

     (இ-ள்.)பண்உடை-பண்ணைக்கொண்ட, எழாலின்-யாழின், இன் இசை
வழிஏ-இனிய ஓசையின் வழியாக, பாடுவார்-;[யாழிசைக்கு ஒப்பப்பாடுவார்
என்றபடி]; பைங்குழல்-பசிய மூங்கிலினாலியன்ற புல்லாங்குழலை, குறிப்பார்-
ஊதுவார்: பெண்உடை மடம் நாண்-பெண்களுக்கு உரிய மடமும் நாணும்,
அகன்ற-அகலுவதற்கு இடனான, பேர் அமளி-பெருமைபெற்ற படுக்கையிலே
நிகழ்கின்ற, பேச்சுஎலாம்-பேச்சுக்களையெல்லாம், பேசி வந்து-பேசிக்
கொண்டுவந்து, அடுப்பார்-நெருங்குவார்; விண் உடை அமிர்தம்-