பக்கம் எண் :

50பாரதம்ஆரணிய பருவம்

தால், 'நமக்கு என்ன நேருமோ!'என்று அஞ்சி மன்மதன் அங்கே நிற்க
மனவுறுதி யில்லாதவனாகி அப்பாற்போய்விட்டன னென்பதாம்.
தொடர்நிலைச்செய்யுட்குறியணி.                                (66)

67.-வானவர்மகளிர்முதலியோர் மீண்டுசெல்லச்
சூரியனும் அஸ்தமித்தல்.

 வானவர்பெருமானேவலால்வந்தவானவர்மகளிருந்தம்மால்,
ஆனவக்கிரீடையாவையும்புரிந்து மொருபயன்பெற்றிலர
                                        கன்றார்,
கானக முழுதும்பரிமளம்பரப்பிக் கானவண்டிமிர்தரப்புகுந்த,
வேனிலுமகன்றதருக்கனுங்குடபால்வெண்டிரைவேலைவாய்
                                      வீழ்ந்தான்.

     (இ-ள்.)வானவர் பெருமான் ஏவலால் - தேவேந்திரனுடைய
கட்டளையாலே, வந்த-,வானவர் மகளிர்உம் - தேவமாதர்களும், தம்மால்
ஆன அ கிரீடை யாவைஉம் புரிந்துஉம் - தங்களாலான அந்த
விளையாடல் எல்லாவற்றையும் செய்தும், ஒருபயன் பெற்றிலர் அகன்றார் -
ஒருநற்பயனையும் பெறாதவராய்ப் போய்விட்டார்கள்: கானகம் முழுதும்
பரிமளம் பரப்பி - அந்தக் காட்டினிடம் முழுதும் நறுமணத்தைப்
பரவச்செய்துகொண்டு, கானம் வண்டு இமிர்தர - காட்டுவண்டுகள் ஒலிக்க,
புகுந்த-,வேனில்உம்-இளவேனிற் பருவமும், அகன்றது - நீங்கிவிட்டது:
அருக்கன்உம் - சூரியனும், குடபால் - மேற்குத்திக்கிலே, வெள் திரை
வேலைவாய்-வெள்ளிய அலைகளையுடைய கடலிலே, வீழ்ந்தான் -
விழுந்தான்;

     வானவர்மகளிரும் வேனிலும் அகன்றதுகண்டு தானும் இனி
இவ்விடத்தைவிட்டு அகலவேண்டுவதே என்று கருதினான் போலச் சூரியன்
அவ்விடத்தைவிட்டு அத்தமலையிற் சேர்ந்தனனென்ற தற்குறிப்பேற்றவணி
தொனிக்கக் கூறினார்.  அருச்சுனனுடைய மனத்தைத் தேவமாதர்கள் புரிந்த
செயல்கள் சிறிதும் மாற்றவல்லன அல்லஆயின என்பது, வானவர்மகளிர்
ஒருபயன் பெற்றிலரகன்றா ரென்பதன் கருத்து.  கானம்வண்டு -இசையைச்
செய்யும் வண்டுமாம்.                                        (67)

                              வேறு.

68.-தேவமாதர்மீண்டு அருச்சுனனது
மனத்திண்மையை இந்திரனிடம் தெரிவிக்க, அவன் அருச்சுனன்
தவஞ்செய்யுமிடத்துக்கு வருதல்.

இந்திரன் சுதன்றனெண்ணம்யாவதென்றினிதினெண்ணி
இந்திர சால மாக வேவினாரெவரு மெய்தி
இந்திர நீலந் தன்னி லிறைவனுக் குரைத்தா ரந்த
இந்திரன் றானு மைந்தன் றவம்புரி யிருக்கை சேர்ந்தான்.

     (இ-ள்.)இந்திரசாலம் ஆக - இந்திரசாலமென்னும் மகா
மாயைவித்தையையொப்ப [பிறர்மனத்தை நன்றாகமயக்கும்படி], ஏவினார்
எவர்உம் - (இந்திரனால்)ஏவியனுப்பப்பட்ட தெய்வமகளிரெல்லோரும்,
இந்திரன் சுதன்தன் எண்ணம் - இந்திரகுமாரனான