வேடர். ஈற்றடி - மனைவியும்தானும் வனிதையும் மகிழ்நனுமானார்எனப் பொருள்கொள்ள வேண்டுதலால், பெயர்களும் பெயர்ப் பயனிலைகளுமாகிய எதிர்நிரனிறைப்பொருள்கோள். (81) வேறு. 82.-நந்திகணநாதர்க்கு உரைக்க, அவர்களும் வேடவடிவங்கொள்ளச்சிவபெருமானும் வேடவடிவங்கொள்ளல். என்றபொழு தினினந்தி முந்திமுதற் கூற்றுதைத்த விருதாள் போற்றி, வென்றிபுனைகணநாதர்க் குரைசெய்தா னவர்களுமவ் வே டங் கொண்டார், கொன்றைகமழ் முடியோனும் பிஞ்ஞகத்தைப் பின் னல்படு குஞ்சி யாக்கித், துன்றுமயிற் பீலிநெடுங் கண்ணிதிரு நெற்றி யுறச் சுற்றி னானே. |
(இ-ள்.)என்ற பொழுதினில்-என்று(சிவபிரான்)கட்டளையிட்ட போதில்,-நந்தி-நந்திகேசுவரர்,முந்தி-விரைந்து, முதல்-முதலில், கூற்று உதைத்த இரு தாள்-யமனையுதைத்தசிவபெருமானது இரண்டு திருவடிகளையும்,போற்றி - வணங்கி,-(பின்பு),வென்றிபுனைகணம் நாதர்க்கு - ஜயத்தைக்கொண்ட சிவகணத்தலைவர்கட்கு,உரை செய்தான்- (சிவாஜ்ஞையைச்)சொன்னான்;அவர்கள்உம்-அக்கணநாதர்களும், அ வேடம் கொண்டார் - அந்த வேட வேஷத்தைப் பூண்டார்கள்: கொன்றை கமழ் முடியோன்உம் - கொன்றைப்பூ வாசனைவீசுகிற திருமுடியையுடைய சிவனும், பிஞ்ஞகத்தை - (தமது)அழகியசடையை, பின்னல் படு குஞ்சி ஆக்கி-பின்னுதல் பொருந்திய மயிராகமாற்றி, துன்று மயில் பீலி நெடுங்கண்ணி - நெருங்கிய மயிலிறகினாற்செய்த நீண்ட நெற்றி மாலையை, திருநெற்றி உற சுற்றினான்-(தமது)அழகியநெற்றியிலே பொருந்தச் சுற்றிலும் அணிந்தார்;(எ-று.) ஊழ்வினையினாற்பதினாறுபிராயம்பெற்றமார்க்கண்டேய முனிவன் கூற்றுவன்வந்து காலபாசத்தால் தன்னைக்கட்டியிழுக்குங்காலத்துப் பரமசிவனைச்சரணமடைய, அப்பெருமான் யமனைக்காலாலுதைத்துத் தள்ளி அம்முனிகுமாரனுக்கு என்றும் பதினாறாகத்தீர்க்காயுசு கொடுத்தருளினனென்பது, கதை. இந்தக் கதையால் அனுபவித்தே தீரவேண்டிய ஊழ்வினையையும்தன்னடியாரைக் கடக்கச்செய்கிற கடவுளது திருவருளுடைமை விளங்கும். இதுமுதல்மூன்றுகவிகள்-இச்சருக்கத்தின் 43ஆங் கவி போன்ற அறுசீராசிரியவிருத்தங்கள். (82) 83.-இதுவும்-சிவபெருமான்வேடவடிவங்கொண்டமை கூறும். நீலமணித்திருக்கண்டநிலவெழவே பலகறைப்பூணிறையக் கட் டிக், கோலமணிக்குழைகளினுங்குழையாகப் பிணையன்மலர்கொண்டு சாத்திச், சேலையெனப்புலியதளுந்திருமருங்கிலுறச்சேர்த்திச்செய்ய |
|