பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்65

     (இ-ள்.)வரை அரசன் திருமடந்தை - பார்வதி, வனம் முலைமேல்-
(தனது)அழகிய தனங்களின்மேல், மணி குன்றி வடம்உம்-
குன்றிமணிகளைக்கோத்தஆரமும்,செம் கை - சிவந்த கைகளில், நிரை
வளைஉம்- வரிசையான வளையல்களும்,புலி பல்லால் நிறம் திகழ்
மங்கலம் பூண்உம் - புலியினது பல்லைக்கோத்ததனால்ஒளி விளங்குகின்ற
மங்கலநாணும், நீலம் மேனி - (தனது)நீலநிறமாகிய திருமேனியில், விரை
அகிலின் நறுசாந்துஉம்-வாசனையையுடையஅகிற்கட்டையின்
தேய்வினாலாகியவாசனைவீசுகின்ற பூச்சும், தழை விரித்த பூ துகில்உம் -
மரத்தின் தழைகளைப்பரப்பினதாலாகியஅழகியசேலையும்(பொருந்த),
வேடமாதர் நிரைநிரைஏ தனைசூழ - வேடப்பெண்கள் கூட்டங்கூட்டமாகத்
தன்னைச்சுற்றி நிற்கும்படி, நின்ற-(தான்)வேட்டுவிச்சிவடிவமெடுத்துநின்ற,
வடிவு அழகினுக்கு-திருமேனியின் அழகுக்கு, வேறுநிகர்உண்டுஓ - வேறு
ஒப்புஉளதோ?  (எ-று.)-மங்கலப்பூண்- மங்கலத்துக்கு அடையாளமான
ஆபரணம்.

     இதுமுதல்ஆறுகவிகள்-இச்சருக்கத்து 43-ஆங்கவிபோன்ற
அறுசீராசிரிய விருத்தங்கள்.                                   (86)

87.-சிவபெருமான்பிரமதகணங்கள் சூழ்ந்துவர
மனைவியோடும்புறப்பட்டுச் செல்லுதல்.

ஓரேனந்தனைத்தேடவொளித்தருளுமிருபாதத் தொருவனந்தப்,
போரேனந்தனைத்தேடிக்கணங்களுடன் புறப்பட்டான்
                                 புனங்களெல் லாஞ்,
சீரேனல் விளைகிரிக்குத்தேவதையாங் குழவியையுஞ் செங்
                                       கையேந்திப்,
பாரேனையுலகனைத்தும்பணிவுடனே புகழ்ந்திடத்தன்
                                  பதிப்பின்வந்தாள்.

     (இ-ள்.)ஓர் ஏனம்-ஒருபன்றி, தனைதேட-தன்னைத்தேடிநிற்க,
ஒளித்தருளும்-(அதற்குக்காணவொண்ணாதபடி)மறைத்தருளிய, இரு
பாதத்து-இரண்டு திருவடிகளையுடைய,ஒருவன் - ஒப்பற்ற பரமசிவன்,-
அந்த போர்ஏனந்தனைதேடி - (அருச்சுனனோடு)போர்செய்தற்கு வருகிற
மூகாசுரனாகியஅந்தப்பன்றியைத் தேடிக்கொண்டு, கணங்களுடன்-
(வேடவடிவங்கொண்ட)பிரமத கணங்களுடனே, புறப்பட்டான்-
(வேட்டைக்குப்)பிரயாணமானார்;(உமாதேவியும்),புனங்கள் எல்லாம்-
கொல்லைகளிலெல்லாம்,சீர் ஏனல்-சிறந்த தினைப்பயிர்,விளை-
விளையப்பெற்ற,கிரிக்கு-மலைக்குஉரிய, தேவதை ஆம்-தெய்வமாகிய,
குழவியைஉம்-(சுப்பரமணியக்கடவுளாகிய)குழந்தையையும், செம் கை
ஏந்தி-சிவந்த கையிலே எடுத்துக்கொண்டு, பார் - பூமியிலுள்ளவர்களும்,
ஏனைஉலகு அனைத்துஉம்-மற்றஉலகங்களெல்லாவற்றிலு முள்ளவர்களும்,
பணிவுடனே-வணக்கத்தோடு, புகழ்ந்திட-துதிக்குமாறு, தன் பதிப்பின்-தனது
கணவனுக்குப் பின்னே, வந்தாள்-;(எ-று.)

     முன்பு ஒருபன்றியினால் தேடிக் காணமுடியாமற்போன
பாதங்களையுடைய ஒருவர், இப்பொழுதுஒருபன்றியைக் காணும்