சொல், என்றான் - என்று (வேடன்)வினாவினான்;என்ற போது - என்று வினாவியபொழுதில், அ குரு குலம் நாதன்உம்-குரு வமிசத்துக்குத் தலைவனான அவ்வருச்சுனனும், தன்னை கூறினான்-தன் வரலாற்றைச் சொன்னான்;(எ-று.) நீ தேவர்கள் மனிதர் அரக்கர்என்ற பகுப்பில் எந்தப் பகுப்பைச் சேர்ந்தவன்? பிராமண க்ஷத்திரிய வைசியர் என்ற மூன்று வருணங்களுள் எந்தவருணத்தான்? உன்னுடையஉடலைப் பார்த்தால் நீ வெகுநாளாய்க் கடுந்தவம்புரிகின்றா யென்று தோன்றுகின்றது. எந்தப்பயனைக் கருதி இவ்வாறு கடுந்தவம் புரிகின்றா யென்று வினாவின னென்க. துவாபரயுகத்தில் மூன்று வருணத்தார்க்கே தவத்தில் அதிகார மாதலால், நான்காம் வருணத்தவரை விட்டிட்டு, 'மறையவனோமன்னவனோ வைசியனோ'என்று வினாவினன். வேதங்களை ஓதுதல் ஓதுவித்தல் என்னும் இருதொழிலுக்கும் உரியவர் அந்தணரே யாதலால், மறையவன் என்பது - அவரையே உணர்த்தும். ஒருகுடைக்கீழ்வையங்காத்தல், ஏகசத்திராதிபத்தியம். 'அவுணமாக்கள்'எனப் பாடங்கொண்டு - அசுரர்களாகிய ஜனங்களென்று உரைத்தலும் பொருந்தும். மறையவனோ முதலியன-முன்னிலையிற் படர்க்கை வந்த இடவழுவமைதி. குறை- அடையவேண்டியதாய் குறையாகி நிற்பது. நிறையுடன் என்றும் பாடம். (96) 97.-இதுமுதல்மூன்றுகவிகள்-ஒருதொடர்: சிவபெருமானாகியவேடுவன், பழம்பகைமைகாட்டிப் போர்செய்ய வருமாறு அருச்சுனனை யழைத்தல். கூறியசொற்கொண்டறிந்துவேடன்மீண்டுங் குருகுலத்தோரை வருளுங்குனிவிற்கற்றுச், சீறிவருதுருபதனைத் தேரிற்கட்டிச்சென்றுகுருதக்கிணை செய்சிறுவனீயோ, வீறிய வெங்குலத்திலொரு வேடன் றன்னைவின்மைபொறா தவன்றடக்கை விரலுங்கொண்டாய், பேறறவன்றொருமுனிவன் வார்த்தைகேட்டுப்பிளந்தனைபல் வேடுவரைப்பிறைவாயம்பால். |
(இ-ள்.)கூறிய - (அருச்சுனன்)சொன்ன, சொல் - வார்த்தையை, வேடன்-சிவவேடன், கொண்டு-காதிலேற்று, அறிந்து - (அவன்வரலாற்றை) அறிந்து, மீண்டும் - மறுபடியும், (அவனைநோக்கி),-குருகுலத்தோர் ஐவருள்உம் - குருவம்சத்தில் தோன்றிய பஞ்சபாண்டவருள்ளும், குனிவில் கற்று-வளைவான வில்லின் தொழிலைப் பயின்று, சீறி வரு துருபதனை தேரில் கட்டி - கோபித்துப் போர்க்குவந்த துருபதராஜனைத் தேர்க்காலிலே கட்டி, சென்று - மீண்டும்போய், குரு தக்கிணை செய் - ஆசாரிய தக்ஷிணையைச் செய்த, சிறுவன்-சிறுபிள்ளை, நீஓ-நீதானோ? வீறிய எம்குலத்தில் - பெருஞ்சிறப்புப் பொருந்திய எமது குலத்தில் தோன்றின, ஒரு வேடன் தன்னை - (ஏகலவ்யனென்னும்)ஒரு வேடனை, வின்மைபொறாது-(அவனது)வில்லின்திறமையைப் பார்த் |