124.-இனி,நான்குகவிகள்-ஒருதொடர்:சிவபிரான் அருச்சுனனைத்தேற்றி'உனக்குவேண்டியதுயாது?' என வினாவியதைத்தெரிவிக்கும். சூதினில்யாவையுந் தோற்றுக்கானிடை ஏதிலர்போலநீ ரிளைத்துவாடினீர் வாதுசெய்புலன்களையடக்கிமண்ணின்மேல் நீதவம்புரிந்தமை நினையலாகுமோ. |
(இ - ள்.)சூதினில் - சூதாட்டத்தில், யாவைஉம் - (உங்கள்) பொருள்களையெல்லாம், தோற்று - தோல்வியடைந்ததனாலிழந்து,நீர் - நீங்கள் ஐவரும், கானிடை - வனத்தில், ஏதிலர் போல - ஒரு பொருளுமில்லாத தரித்திரர்போல, இளைத்துவாடினீர் - மெலிந்து வருந்தினீர்கள்;நீ-, வாது செய் புலன்களை- (நல்வழியிற்செல்ல வொட்டாமல்) வருத்தந் தருகிற ஐம்புலன்களையும்,அடக்கி - அடங்கச் செய்து, மண்ணின்மேல்-இந்நில வுலகத்தில், தவம் புரிந்தமை-தவத்தைச் செய்தவிதம், நினையல்ஆகும்ஓ-எண்ணக் கூடியதோ? (எ - று.)- இத்தன்மைய தென்று நினைத்துப்பார்ப்பதற்கும் அரியது என்றபடி. ஏதிலர் -ஐம்பொறிகளால் நுகரப்படும் பொருளில் எதுவும் இல்லாதவர்:வறியவர். வாது - பாதா என்றவடமொழித்திரிபு:வாதம் என்ற வடமொழித்திரிபுஆயின், தருக்கமென்றுபொருளாம். 125. | மூகனென்றுரைக்குமம் மூகதானவன் வேகமோடேனமாய்விரைவில்வந்தனன் நாகவெங்கொடியவனவின்றவாய்மையால் யோகுசெயுனதுயிருண்ணவெண்ணியே. |
(இ - ள்.)மூகன் என்று உரைக்கும் - மூகனென்று பெயர் சொல்லப்படுகின்ற, அ மூக தானவன் - மூடனாகியஅவ்வசுரன், நாகம் வெம் கொடியவன் நவின்ற வாய்மையால் - பாம்பையெழுதிய (பகைவர்க்குப்) பயங்கரமான துவசத்தையுடைய துரியோதனன் சொன்ன வார்த்தையினால், யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணி - தவஞ்செய்கின்ற உன்னுடைய உயிரை ஒழிக்கநினைத்து,ஏனம் ஆய்- பன்றியுருவமாகி, வேகமோடு-உக்கிரத்துடனே, விரைவில்-சீக்கிரமாக, வந்தனன்-வந்தான்: (எ - று.) துரியோதனன்தனதுநாவிரண்டுடைமையையும், நன்மை செய்தார்க்குத் தீமைசெய்யுந் தகைமையையும், எப்பொழுதுங் கோணலாகவே செல்லுந் தன்மையையும், கொடுமையையும் புலப்படுத்தற்கு நாகத்தைக் கொடியிற்கொண்டனன்போலும். யோகு=யோகம்:வடமொழித்திரிபு. உயிருண்ண - உண்ணப்படாதது உண்ணப்படுவதுபோலச் சொல்லப்பட்ட மரபுவழுவமைதி. (125) |