பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்139

     எதிரிற் சமீபித்தான், (பின்பு), இருவர்உம், இந்த இரண்டுபேரும் சிவன்
வளைத்த பொன் மலையின்உம் வலியின் சிலை வளைத்தனர்-சிவபிரான் (முன்பு
ஒருகால் வில்லாக) வணக்கிய பொன்மயமான மகாமேருகிரியினும்
வலிமையையுடைய (தம்) வில்லை வளைத்துப் பொருதார்கள்: (அச்சமயத்தில்), படு
களம்முழுவதும்-அப்போர்க்களம் முழுவதும், எறிதரு பவனன்-வீசுகிற காற்று, மை
கடல் வடவையை முனிதரு-கரியகடலிலுள்ள படபாமுகாக்கினியைச் சினந்து
எழுப்புகிற, பவனம்-காற்றை, ஒத்தது-; (எ - று.)

     தன்னைநோக்கி அபிமன் கூறியவாறே இலக்கணன் தான் அவனைநோக்கிக்
கூறினா னென்பதை, 'எதிரொலியென'என்ற உவமையால் விளக்கினார், பவநம்-
வடசொல். ஏறிதருபவனன் மைக்கடல்வடவையை முனிதரு பவன மொத்தது-
போர்க்களம் மிகக் குழப்பமடைந்தது என்றவாறாம். எரிகிற நெருப்பைக் காற்று
மிகுவித்த வியல்பு. பவநம்-இடத்தையென்று கூறுவாருமுளர். பி - ம்: வடவையின்.
முனிதருபருவம்.                                                (226)

89.துரகதத்துடல்கெழுமினசிலகணைதுவசமற்றிடவிரவினசில
                                கணையிருவர்
நெற்றியுமெழுதினசிலைகணையிருபுயத்திடைசொருகின
                                  சிலகணை
யரணியொத்தெரிகதுவினசிலகணையகன் முகட்டையு
                          முருவினசிலகணை,
முரணிலக்கணகுமரனுமபிமனு முடிகியிப்படி
                            முரணமர்புரியவே

இதுவும், மேற்கவியும் - குளகம்.

     (இ-ள்.) (இருவரும் ஒருவர்மேல்ஒருவர் எதிர்த்து எய்த அம்புகளுள்), சில
கணை-சிலஅம்புகள், துரகதத்து உடல்-(எதிரியின்) தேர்க்குதிரைகளின் உடம்பில்,
கெழுமின-நிறைந்தன; சிலகணை-, துவசம் அற்றிட - கொடிஅறும்படி, விரவின -
கலந்தன; சிலகணை-, இருவர் நெற்றிஉம்-இரண்டுபேரது நெற்றியிலும்,  எழுதின-
பதிந்தன; சிலகணை,-    இரு புயத்திடை இரண்டு தோள்களிலும், சொருகின -
தைத்தன;சிலகணை-, அரணி ஒத்து அரணிக்கட்டைபோன்று, எரி கதுவின-தீயை
உண்டாக்கின, சிலகணை-, அகல் முகட்டைஉம்-பரந்த ஆகாயத்தின்
மேலிடத்தையும், உருவின-ஊடுருவிச்சென்றன; முரண்- வலிமையையுடைய,
இலக்கணகுமாரனும் அபிமனும்-, முடுகி-முனைந்து, இ படி-இவ்வாறு, முரண் அமர்
புரிய-கொடும்போரைச்செய்ய,-(எ - று.) -"கணை ***முழுகின' என அடுத்தகவியோடு
முடியும்; இனி, இச்செய்யுளைக் குளகமாக்காமல் 'அமர்புரிய'என்பதை, 'கெழுமின'
என்பது முதலியவற்றோடு முடித்தலும் ஒன்று. அரணி - தீக்கடைகோல்.

90.மழைமு கிற்குல நிகர்திரு வடிவினன் மருகன் முட்டியு
                        நிலையுமெய் வலிமையு,
மழகு றத்தொடு கணைகுரு பதிமக னவயவத்தினி
                            லடைவுற முழுகின,
கழல்க ளற்றன விருதொடை நழுவின கவச மற்றது
                            கரமலர்புயமுடன்,
முழுதுமற்றன வொளிவிடுநவமணி முகுட மற்றது
                      முகிழ்நகை முகனொடே.

     (இ-ள்.) மழை - மழையைப்பொழிகிற, முகில்-காளமேகத்தின், குலம்-இனத்தை, நிகர்-ஒத்த, திருவடிவினன்-(கரிய)