கரிய கடல்கரைபுரள்வதுபோல, களம் அடைய-போர்க்களம் முழுவதிலும், அரவம் விஞ்சி யிட்டது- ஆரவாரம் மிக்கது: (எ - று.) நிலை - கதைப்போரில் அடிக்கத்தக்க இடம். நெரிநெரிதல் இரட்டைக்கிளவி. தரி-தரிப்பு: முதனிலைத்தொழிற்பெயர். அரவம்-ரவம்; வடசொல். (268) வேறு. 131.- இதுமுதல் நான்குகவிகள் - அபிமனதுமரணத்துக்குக் கவி இரங்கல். மாயனாந் திருமாமன் றனஞ்சயனாந் திருத்தாதை வானோர்க் கெல்லா, நாயனாம் பிதாமகன்மற் றொருகோடி நாரதிபரா நண்பாய் வந்தோர், சேயனா மபிமனுவாஞ் செயத்திரதன் கைப்படுவான் செயற்கை வெவ்வே, றாயநா ளவனிதலத் தவ்விதியை வெல்லும் வகை யார்வல் லாரே. |
(இ-ள்.) (அபிமனுக்கு), திரு மாமன் - சிறந்த மாதுலன், மாயன் ஆம் - கண்ணனாம்; திரு தாதை-சிறந்த தந்தை, தனஞ்சயன் ஆம்-அருச்சுனனாம்; பிதாமகன்- பாட்டன், வானோர்க்கு எல்லாம் நாயன் ஆம்-தேவர்களுக்கெல்லாந் தலைவனானஇந்திரனாம்; மற்று-மேலும், நண்பு ஆய் வந்தோர் - சினேகமும் உறவுமாகப்பொருந்தினவர், ஒரு கோடி நராதிபர் ஆம் - ஒரு கோடிக்கணக்கான அரசர்களாம்;(இப்படியிருக்க), சேயன் ஆம்-இளங்குமரனாகிய, அபிமனு-அபிமந்யு, செயத்திரதன்கை படுவான் அம் -சயத்திரதனது கையால் இறப்பானாம்; செய்கை-(ஊழ்வினையின்)செய்கைகள், வெவ்வேறு ஆய நாள்- வேறுவேறுவிதமாக நிகழ்ந்தகாலத்தில்,அவனிதலத்து-உலகத்தில், அ விதியை வெல்லும் வகைவல்லார்- அவ்வூழ்வினையைச்சயிக்கவல்லவர்கள், யார்-யாவர் (உளர்)? [எவருமில்லை யென்றபடி]; (எ - று.) எல்லாச்சிறப்புக்களும் அமைந்திருக்கவும் அபிமன் அழிந்தா னென்றசிறப்புப்பொருளை 'விதியை வெல்லவல்லார்யார்? என்னும் பொதுப்பொருள் கொண்டு விளக்கியதனால் வேற்றுப்பொருள்வைப்பணி. "ஊழிற்பெருவலியாவுள மற்றொன்று, சூழினுந் தான்முந்துறும்" என்ற இதனால், ஊழின்விலக்கலாகாத வலிமையைஉணர்க. இக்கவியில்வந்த 'ஆம்' என்னுஞ்சொற்கள் பலவும்-உயர்வு, சிறப்பு, வியப்பு முதலிய சிலகுறிப்புக்களை விளக்கின: "கைத்தோடுஞ் சிறைகற்போயை,வைத்தோனின்னுயிர்வாழ்வானாம், பொய்த்தோர்வில்லிகள் போவாராம். இத்தோடொப்பதி யாதுண்டோ" எனக் கம்பராமாயணத்திலுங் காண்க. இது இடைச்சொல்லின்பாற்பட்டது. ஆகும்என்னும்செய்யுமென்முற்றாகக் கொள்வோமெனின் 'நராதிபராம'்எனப் பலர்பாற்பெயரோடும் வந்ததனால், அது பொருந்தாது; "பல்லோர்படர்க்கைமுன்னிலை தன்மையில், செல்லாதாகுஞ் செய்யுமென்முற்றே" என்பதுஇலக்கணமாதலால். இரட்டுற மொழிதலால், நண்பு- உறவுமாயிற்று, நாயகன் என்றவடசொல், நாயன் என விகாரப்பட்டது. மாயன், தநஞ்சயன், வானோர்க்கெல்லாம்நாயன் என்ற பெயர்களாற் குறித்தது, அவரவர்பெருமையை |