காட்டிலுமொன்று மிகுதியாகக் கனைத்தல்செய்யவும், குன்று குன்றொடு உற்று என - மலைகள் ஒன்றோடொன்று சமீபித்தாற்போல, கொடி கொள் தேர் குலுங்க - கொடிகட்டியுள்ள இருவர்தேர்களும் அசைந்து நெருங்கவும், நீடு போர் விளைந்தது - பெரும்போர் உண்டாயிற்று; ( எ -று.)- ஆல் - ஈற்றசை. அருச்சுனனும் துரோணனும் ஒருவர்க்கொருவர் சலியாத மகா வீரராதலால் நெடுநேரம்பொருதன ரென்க. 'முனைகுலைந்த' என்பதற்கு - வலிமைநிலையழிந்த என்றுமாம். பி - ம் : சென்றவித்தனஞ்சயற்கு. இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் - பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்றுவிளச்சீரும், மற்றையாறும்மாச்சீர்களுமாகிய எழுசீராசிரிய விருத்தங்கள். (409) 13. | முட்டியாலுநிலையினாலுமொய்ம்பினாலுமுரணுறத் தொட்டவில்லுநிமிர்வறத்தொடுத்தவின்மையாலுமுன் கிட்டியாசிரீயனுங்கிரீடியும்பொரப்பொரப் பட்டவில்லையிருவர்மேலும்விட்டவிட்டபகழியே. |
(இ -ள்.) ஆசிரீயன்உம்- துரோணாசாரியனும், கிரீடிஉம்- அருச்சுனனும், முன்கிட்டி - எதிரிலே (ஒருவரையொருவர்) நெருங்கி, முட்டியால்உம் - கையில் விற்பிடிக்குந் திறத்தினாலும், நிலையினால் உம் - (விற்போரில்நிற்றற்குரிய) நிலைவகைகளாலும், மொய்ம்பினால் உம் - தோள்வலிமையினாலும், முரண் உற தொட்ட வில்லு நிமிர்வு அற - வலிமைபொருந்தக் கையிலேந்திய விற்கள் நிமிர்தலொழிய [நன்றாகவளைய], தொடுத்த - அம்புதொடுத்த, வின்மையால்உம்- விற்போர்த்திறத்தினாலும், பொர பொர - மிகுதியாக (ஒருவரோ டொருவர்) மேன்மேற் போர்செய்கையில், விட்ட விட்ட பகழி - (ஒருவர்மேலொருவர்) மிகுதியாக விட்ட அம்புகளெல்லாம், இருவர் மேல்உம் பட்ட இல்லை - இரண்டுபேர்மேலும் பட்டனவில்லை; குருவாகிய துரோணன்போலவே அருச்சுனனும் வில்வித்தையில் மிக்க திறமுடையவனாதலால், இவ்விருவரும் எய்த அம்புகளெல்லாம் அவரவர் மாறாக எய்த எதிரம்புகளினால் தடுக்கப்பட்டு இடையில் ஒன்றோடொன்று முட்டிக் கீழ்விழுந்திட்டனவே யன்றி ஒன்றேனும் இவர்களுடம்பிற் படவில்லை என்பதாம். ஆசிரீயன் - நீட்டல்விகாரம். (410) 14. | தேரிரண்டுமிடம்வலந்திரிந்துசூழவரமுனைந் தோரிரண்டுதனுவும்வாளியோரொர்கோடியுதையவே காரிரண்டெதிர்ந்துதம்மின்மலைவுறுங்கணக்கெனப் போரிரண்டுவீரருக்குமொத்தநின்றபொழுதிலே. |
இதுவும், அடுத்தகவியும் - குளகம். (இ-ள்.) தேர் இரண்டுஉம் - (தங்கள்) தேர்களிரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர - இடசாரியாகவும் வலசாரியாகவும் மண்டலமாகவும் உலாவிவரவும்,- ஓர் இரண்டு தனுஉம் - (தங்களுடைய) ஒப்பற்ற விற்களிரண்டும், ஒர் ஒர் கோடி வாளி - ஒவ்வொன்று ஒவ்வொரு கோடிக்கணக்கான அம்புகளை, முனைந்து |