பக்கம் எண் :

366பாரதம்துரோண பருவம்

யும் (வேறோராயுதத்தாற்) கொல்வாயாக,' என-என்று சொல்லி, மனம் கொதித்து
கன்றலும்-மனம் மிக வெதும்பியவளவில்,- தென்றல்உம் நிலவுஉம் நிகர் என
தன்னை சேர்ந்தவர் இளைப்புஎலாம் தீர்ப்பான்-தென்றற்காற்றும் நிலாவும்
ஒப்பாம்படிதன்னை யடுத்தவர்களுடைய இளைப்பு முழுவதையுங் களைபவனான
கர்ணன், அகணத்து - அந்தக்ஷணத்திலே, அ வேல்-அந்தவேலாயுதத்தை,
அவன்மேல் -அந்தக்கடோற்கசன்மேல், காலன் வெம் சூலம் ஒத்து எறிந்தான் -
யமனதுகொடியசூலாயுதத்தை (யெறிந்தாற்) போல எறிந்தான்; (எ - று.)

     'இப்பொழுது இவ்வேலினால் இவ்வரக்கனைக் கொன்று எம்மையும் எமது
சேனையையும் பிழைப்பித்தாற் பின்பு அருச்சுனனை வேறுவகையாற் கொல்லலாம்'
என்று கூறித் துரியோதனன் நிர்ப்பந்திக்க, கர்ணன் அங்ஙனே செய்தானென்க.
தென்றலும் நிலவும் நிகரெனத்தன்னைச்சேர்ந்தவரிளைப்பெலாந் தீர்ப்பான் -
கருத்துடையடைகொளியணி.                               (607)

211.-கடோற்கசன் இறத்தல்.

எறிந்தவேல்பகைவன்மார்பகந்துளைத்திட்டிந்திரனிடத்து
                                   மீண்டெய்த
மறிந்தமால்வரைபோலரக்கனுமுகம்பார்மருங்குறவிழுந்துயிர்
                                    மடிந்தான்
செறிந்தருகணைந்தசேனையும்பயந்தோர்சிந்தையுஞ்
                               செயலறக்கலங்க
வறிந்தவர்க்கன்றியறியொணாவையனவர்துயரகற்று
                                மாறுரைப்பான்.

     (இ-ள்.)  எறிந்த வேல் - (கர்ணன்) வீசிய வேற்படை, பகைவன் மார்பகம்
துளைத்திட்டு - பகைவனான கடோற்கசனது மார்பினிடத்தை நன்றாகத்துளைத்து,
இந்திரனிடத்து மீண்டு எய்த - (தனக்கு உரியவனான)இந்திரனிடத்திலே
மீண்டுசென்று சேர,-அரக்கன்உம்-கடோற்கசனும், மறிந்த மால் வரை போல் -
கவிழ்ந்துவிட்ட பெரிய மலைபோல, பார் மருங்கு முகம் உற விழுந்து-தரையிலே
முகம்படும்படி கவிழ்ந்துவிழுந்து, உயிர்மடிந்தான் - இறந்தான்; (அப்பொழுது),
செறிந்து அருகு அணைந்த சேனைஉம் - அடர்ந்து அருகிலெடுத்துள்ள
பாண்டவர்சேனையும்,  பயந்தோர் சிந்தைஉம் - (அவனது) தந்தையரான
பாண்டவரது மனமும், செயல் அற கலங்க - செய்தொழிலொன்று மில்லாதபடி
கலக்கமடைய,-அறிந்தவர்க்கு அன்றி அறிய ஒணா ஐயன் -
தந்துவஞானமுடையோர்க்கேயன்றி (மற்றையோர்க்கு)-அறிய முடியாத கடவுளான
கண்ணன், அவர் துயர் அகற்றும் ஆறு உரைப்பான் - அவர்களுடைய
துன்பத்தைப்போக்கும் பொருட்டுச் சொல்வான்; (எ - று.) -அதனை அடுத்த
இரண்டுகவிகளிற் காண்க. பெரியதாதையையும் சிறியதாதையரையுஞ் சேர்த்து
'பயந்தோர்' என்றது, உபசாரவழக்கின்பாற்படும்.                  (608)

212.-இதுவும், அடுத்தகவியும்-ஒருதொடர்: கிருஷ்ணன்
பாண்டவர்க்குச் சமாதானங்கூறலைத் தெரிவிக்கும்.

இந்தவேல்கவசகுண்டலங்கவர்நாளிரவிமைந்தனுக்குத்
தந்தவேலிதனையாவர்மேல்விடினுந்தரிப்பறத்தெறுமவன்வரத்தால்