இதுமுதல் இச்சருக்கமுடியுமளவுள்ள ஒன்பது கவிகள்-பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள் கூவிளங்காய்ச்சீர்களும், ஏழாவதுவிளச்சீருமாகிய கழிநெடிலடி நான்கு கொண்டுஎழுசீராசிரியவிருத்தங்கள். (659) 43.-வியாசன் அசுவத்தாமனுக்குச் சமாதானங் கூறுதல். நின்றசாபமுனிமைந்தன்வந்தமுனிநிருபனைப்பரமனிகரெனச் சென்றுகைதொழுதுபரசிடப்பரிவுதீர்கருத்தினொடுசெப்பினான் சென்றுபோரிலழியாகசேனன்மகனழலினூடுவருசாபமும் வென்றிவாகைபுனைவிசயனோடுகருமேகவண்ணன்வருவிதியுமே. |
(இ-ள்.) நின்ற சாபம் முனி மைந்தன் - போரில்நின்ற வில்லுக்கு உரிய துரோணனது புத்திரனான அசுவத்தாமன், வந்தமுனி நிருபனை - (அங்கு) வந்துசேர்ந்த முனிவர் தலைவனான வியாசனை, பரமன் நிகர் என-யாவரிலுஞ் சிறந்தகடவுளோடு ஒப்பாக (எண்ணி), சென்று கைதொழுது - (எதிர்கொண்டு) அருகிற்சென்று கைகூப்பிவணங்கி, பரசிட-துதிக்க,-(அம்முனிவன்),-பரிவு தீர் கருத்தினொடு - (அசுவத்தாமனது) துன்பத்தை நீக்குங் கருத்துடனே,-அன்று போரில்அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபம்உம் - அக்காலத்திற் போரிலே(துரோணசிஷ்யனான அருச்சுனனுக்குத்) தோற்ற துருபதனது புத்திரனாகிய திட்டத்துய்மன் யாகாக்கினியினின்று வந்த வரத்தையும், வென்றி வாகை புனை விசயனோடு கரு மேகவண்ணன் வரு விதிஉம்-வெற்றிக்கு அறிகுறியான வாகைப்பூமாலையைச்சூடிய அருச்சுனனுடன் காளமேகவண்ணனான கண்ணபிரான் திருவவதரித்த முறைமையையும், செப்பினான் - (அவனுக்கு)எடுத்துக் கூறியருளினான்; தவாறாமைபற்றியும், துரோணனுக்குத் தீங்காய் முடிதல்பற்றியும், திட்டத்துய்மன்வரத்தோடு பிறந்தமை 'சாபம்' எனப்பட்டது. நான்காமடியிற் குறித்த செய்தி,பூமிபாரந்தீர்த்தற்குநாரயாணர் கிருஷ்ணார்ச்சுனராய்த் தோன்றியமையாகும். (660) 44.-வியாசன் அசுவத்தாமனுக்குச் செய்யும் உபதேசம். வரத்தினாலுனதுதந்தைபோரினின்மடிந்ததன்றியொருவயவர்தஞ் சரத்தினாலவனைவெல்லவல்லவர்தராதலத்தின்மிசையில்லையால் உரத்தினால்விறன்மயூரவாகனனையொத்தவீரவினியுள்ளுறச் சிரத்தினாலரனையடிவணங்கியிடர்தீருமாறுநனிசிந்தியாய் |
இதுவும், அடுத்த கவியும் - ஒருதொடர். (இ-ள்.) உரத்தினால்-வலிமையினால், விறல் மயூர வாகனனை ஒத்த- பராக்கிரமமுள்ளவனான மயில்வாகனமுடைய சுப்பிரமணியனைப் போன்ற, வீர- வீரனே! உனதுதந்தை - உனது பிதாவான துரோணன், வரத்தினால்-(துருபதன் பெற்ற)வரத்தினால், போரினில் மடிந்தது அன்றி-போரில் இறந்ததே யல்லாமல், தம் சரத் |