நல்வினைதீவினைகளின் தன்மையும் அவற்றின்பயனையும் சிறிதாயினும் அறிந்திருப்பின் பாண்டவர்க்கு அரசுகொடாமை முதலிய அநீதிகளைப் புரியானென்பார்,' அதிட்டமொன்று முணர்கலான்' என்றார். வதிட்டன்-வஸிஷ்டன் என்னும் வடசொல்லின் திரிபு; இதற்கு-(பஞ்சஇந்திரியங்களை) நன்றாக வசப்படுத்தினவன் என்று காரணப்பொருள்: ஞானத்திற் குடிகொண்டவ னென்றுங் கூறுவர். இவன்- பிரமனது புத்திரன்: வைதிக லௌகிக ஒழுங்கங்களில் மிகச்சிறந்தவன். சூரியகுலத்தரசர்க்குப் புரோகிதனும் பிரதானமந்திரியுமான இவன்போலவே, துரோணனும்கௌரவர்க்குக் குருவும் சிறந்தமந்திரியும் ஆனதால்,' வதிட்டனுந்துதிக்கும்வாய்மை வரிசிலைக்கைம்முனிவன்' என்றார். உம் - உயர்வுசிறப்பு. பதிட்டிதம்- ப்ரதிஷ்டிதம் என்னும் வடசொல் சிதைந்தது; இதற்கு- நிலைநிறுத்தப்பட்டது என்று பொருள். தெளிவுபற்றி, 'பதிட்டிதம் பிறந்தது' என இறந்தகாலத்தாற் கூறப்பட்டது; காலவழுவமைதி. அதிட்டம் - அத்ருஷ்டம்: இதற்கு-கண்ணாற் காணப்படாத தென்று அவயவப்பொருள். (84) 40. | விட்டவிட்டரதசதுரங்கவேழவாகனத்தொடுந் தொட்டதொட்டசிலையொடுந்துணிந்துவெங்களத்திடைப் பட்டபட்டநிருபர்தங்கள்பாடுகாணவெண்ணியோ முட்டமுட்டவேகுகென்றுதன்படைக்குமுந்தினான் |
(இ-ள்.) விட்ட விட்ட - மேன்மேற்செலுத்தின, ரதம் - தேர்களும் துரங்கம்- குதிரைகளும், வேழம் - யானைகளுமாகிய, வாகனத்தொடுஉம்- வாகனங்களுடனும், தொட்டதொட்ட- மிகுதியாக(க்கையில்) ஏந்திய, சிலையொடுஉம் - வில்லுடனும், துணிந்து- துண்டு பட்டு, வெம் களத்திடை - கொடிய போர்க்களத்தில், பட்ட பட்ட - மிகுதியாக இறந்த, நிருபர்தங்கள்- (தன்பக்கத்து) அரசர்களது, பாடு- நிலைமையை, காண - பார்க்க, எண்ணிஓ - நினைத்தோ, (துரியோதனன்), முட்ட முட்ட ஏகுக என்று - மிகநெருங்கச் செல்லுங்களென்று (தன்சேனையரசரை நோக்கிச்) சொல்லிக்கொண்டு, தன் படைக்கு முந்தினான் - தனது சேனைக்கு முற்பட்டு வந்தான்; துரியோதனன் வந்ததது, மேல் போரிற் பகைவரை வெல்லுதலாக முடியாமையால், அதனை, போர்க்களத்தில் அழிந்த அரசர்கள் பட்டபாட்டைப் பார்க்கக்கருதியோ வந்தானென்று சமத்காரமாக உத்பிரேட்சித்தார். (85) 41.-இரண்டுகவிகள்-அபிமன் தானொருவனாக எண்ணில்லாத சேனைகளையழித்தல் கூறும். முந்தவந்தமன்னனுமுரண்கொள்வாகையரசரும் வந்தவந்தசேனையும்வகுத்தணிந்துமுனையவே யந்தவந்தமுனைகடோறுமந்தவந்தவீரர்மெய் சிந்தவந்துடற்றினன்சிலைத்தடக்கையபிமனே. |
|