(இ-ள்.) அந்தணன் ஏவை எல்லாம் - பிராமணனாகிய அசுவத்தாமனது அம்புகளையெல்லாம், அவனிபன் - க்ஷத்திரியனாகிய பாண்டியன், அ அ அம்பால்- (தான் எய்த) அந்தந்த அம்புகளினால், முந்துற விலக்கி - முன்னே தடுத்து,தங்கள் மூவகை தமிழ்உம்போல - தாங்கள் வளர்த்த (இயல் இசை நாடகம் என்னும்)மூன்றுவகைப் பட்ட தமிழைப்போல, சிந்தையில் குளிக்கும் ஆறு - மனத்தில்(நன்றாய்ப்) பதியும்படி, சிலீமுகம் மூன்று விட்டான்- மூன்று அம்புகளை எய்தான்; தந்தையை முதுகு கண்டோன் - தகப்பனைப் புறங் கொடுக்கச்செய்த பாண்டியன், தனயனுக்கு இளைக்கும்ஓ - பிள்ளைக்கு இளைப்பானோ? (எ -று.)- தான் - ஈற்றசை. பாண்டியன் அசுவத்தாமனை வென்றா னென்னுஞ் சிறப்புப் பொருளை 'தந்தையைவென்றவன் மைந்தனுக்கு இளைப்பனோ?' என்னும் பொதுப்பொருளாற் சாதிக்கவைத்தனால், வேற்றுப் பொருள்வைப்பணி. 'தந்தையை முதுகு கண்டோன் தனயனுக்கு இளைக்குமோ' என்றது - பாண்டியன் பரமசிவனைப் புறங்கொடுக்க அடித்தவ னாதலாலும், அசுவத்தாமன் சிவகுமாரனாதலாலும். அரிமர்த்தன பாண்டியன்மீது கோபத்தாற் சிவபெருமான் வையை யாற்றை அவன் நகர்மேல் ஏவ,அந்நதி மதுரையை அழிக்குமாறு பெருகி வர, அந்நகரத்தார் யாவரும் அரசன்கட்டளைப்படி கூலியாள் வைத்துக் கரைகோலுகையில், பிட்டுவிற்றுண்ணும் வந்தியென்னும் மலட்டுக்கிழவிக்குத் தன்கருணையினால் வேலையாளாக வந்து அமர்ந்த சோமசுந்தரக்கடவுள் வேலையைச் செவ்வையாகச்செய்யாமல் அவனைத் தன்கைப்பொற்பிரம்பால் முதுகில் வீசி அடிக்க, அப்பெருமான் அந்தர்த்தான மாயினா னென்பது, கதை. (201) 111.-பாண்டியன் மாற்றாரது சேனைக்கடலை வற்றுவித்தல். காலினாற்றுகைத்துவேலைக்கனைகடலேழுமுன்னாள் வேலினாற்சுவற்றுங்கொற்றவெங்கயல்விலோதவீரன் மாலினாற்பொருகைவேழம்வாசிதேர்பதாதிமாயக் கோலினாற்சுவற்றினானக்குறுகலர்சேனைவெள்ளம். |
(இ-ள்.) முன் நாள் - முற்காலத்தில், வேலை - அலைகளையுடைய, கனை - ஒலிக்கிற, கடல் ஏழ்உம் - ஏழுகடல்களையும், காலினால் - (தன்) கால்களினால், துகைத்து - மிதித்து, வேலினால் - வேலாயுதத்தால், சுவற்றும் - வற்றச்செய்த, கொற்றம் - வெற்றிக்கு அடையாளமான, வெம் - கொடிய, கயல் விலோதம் - மீனக்கொடியையுடைய, வீரன் - வீரத்தன்மையையுடைய பாண்டியன், மாலினால் பொரு - மதமயக்கத் தோடு போர்செய்கிற, கை - துதிக்கையையுடைய, வேழம் - யானைகளும், வாசி - குதிரைகளும், தேர் - தேர்களும், பதாதி - காலாள்களும், மாய - அழியும்படி, கோலினால் - அம்பினால், குறுகலர் - பகைவர்களுடைய, சேனை - சேனையாகிற, அ வெள்ளம் - அக்கடலை, சுவற்றினான்- வற்றச் செய்தான்;(எ -று.) பாண்டியன் முன்னே வேலெறிந்து சமுத்திரத்தை வற்று வித்ததுபோல, இப்பொழுது அம்பெய்து சேனாசமுத்திரத்தை |