பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்149

நிகர்வோர்-சமானமானவராகிய, அலை இரண்டு என - இரண்டு கடல்கள் போல,
அதிர்ந்து - ஆரவாரித்து, பொரும்-போர் செய்கிற, அ இருவர் - அந்த
அருச்சுனனும் கர்ணனும்,-மலை இரண்டினை வளைத்து- இரண்டுமலைகளை
(வில்லாக) வணக்கிக் கொண்டு, எதிர் மலைந்தது எனஏ - எதிரிற்
போர்செய்ததுபோலவே,  கை சிலை இரண்டுஉம் நிமிராது - கையிற்பிடித்த
இரண்டுவிற்களும் (வளைவு) நிமிராமல், கணை சிந்தினர்கள் - அம்புகளை
சொரிந்தார்கள்; (எ - று.)

     பரமசிவன் ஒரேகாலத்தில் இரண்டுவடிவமெடுத்துநின்று
இரண்டுமேருமலைகளைக் கையில் வில்லாகஎடுத்துக்கொண்டு போர்
செய்தாற்போன்றனர் என்பது, கருத்து, நிமலர்என்றபாடத்திற்கு- திருமாலும்
உருத்திரமூர்த்தியும் என்க; தேவர்கள் தாரதமியமறிய இருவரையும் போர்மூட்டிவிட,
பொருதன ரென்று வரலாறு ராமாயணத்திலுள்ளது.                       (290)

200.-இரண்டுகவிக்ள்- அருச்சுனன் கடுமையாக அம்புவிட,கர்ணன்
அவற்றைத் தறித்தமை கூறும்

தேவதத்தமுமுழக்கியுயர்தேவர்பலரா
லாவமெத்தும்வகைபெற்றபலவம்புதெரியா
மூவர்தத்தம்வடிவாமுதல்வன்மெய்ப்புதல்வன்மேற்
பூவின்மொய்த்தவறுகாலினிரைபோலவிடவே.

இதுமுதல் மூன்றுகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) (அருச்சுனன்),-தேவதத்தம்உம் முழக்கி-தேவதத்தமென்னும்(தனது)
சங்கத்தை யெடுத்து நாதஞ்செய்து, உயர்தேவர்பலரால் - சிறந்த பல தேவர்களால்,
ஆவம் மெத்தும் வகை தூணிநிரம்பும்படி பெற்ற-, பல அம்பு - அநேகபாணங்களை,
தெரியா - ஆராய்ந்து எடுத்து, மூவர் தத்தம் வடிவு ஆம் முதல்வன் -
திரிமூர்த்திகளது சொரூபியாகிய சூரியபகவானது,-மெய் புதல்வன்மேல்-
உண்மையானபுத்திரனாகியகர்ணன்மேலே, பூவின்மொய்த்த- மலரிலே மொய்க்கிற,
அறுகாலின் நிரைபோல - வண்டுகளின் கூட்டத்தை யொக்கும்படி (சாரத்தை
உறிஞ்சும்படி),  விட -பிரயோகிக்க,-(எ-று  "அங்கர்பெருமான்... தறியா' என
இயையும்.

     தேவதத்தமென்னுஞ் சங்கம், அருச்சுனனுக்கு அக்கினிதேவனாற்
காண்டவதகனகாலத்தில் அளிக்கப்பட்டது. சூரியன் திரிமூர்த்திகளின்
சொரூபியென்றுஸ்ரீராமாயணத்தில் யுத்தகாண்டத்தில் ஆதித்யஹ்ருதயத்திலும்,
பிறநூல்களிலுங்கூறப்பட்டுள்ளது. மூன்றாம் அடிக்கு - திரிமூர்த்திசொரூபியாகிய
ஸ்ரீமந்நாராயணனதுதிருமேனியின்  முக்கிய அவயவமாகிய
வலக்கண்வடிவமானசூரியனதுகுமாரனென்றும் உரைக்கலாம்; அவ்வுரையில், மெய்
என்பது - அதனுறுப்புக்களுட்சிறந்த கண்ணுக்கு முதலாகுபெயர், இனி,
முச்சுடர்களின் வடிவமாகியசூரியபகவானது உடம்பின் சேர்க்கையாற்பிறந்த புதல்வ
னென்றும்பொருள்கொள்ளலாம். அறுகால்-ஆறாகிய கால்களையுடையது;
பண்புத்தொகைபுறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.                    (291)