தைரியத்தைக் குறையச்செய்பவனாதலால், அவனை இங்ஙனங் கூறினார், தேரு, உ -சாரியை, தேரும் என்று பிரிப்பினுமாம். (322) 232.-கர்ணன் பரசுராமன்சாபத்தை நினைத்தல். கதவாசிநடையற்றுவலியற்றுவரிவிற்கொள்கணையாவையும் விதவாழிநிலனுற்றுவிரைதேருமெய்வன்புமெலிவுற்றபின் புதவாமன்மழுவாளியுரைவெய்தசாபத்தையுறவுன்னினா னதவாமுரட்போர்தனக்கஞ்சுமோவென்றுமடலங்கர்கோன். |
(இ-ள்.) அடல் - வலிமையையுடைய, அங்கர் கோன் - அங்க நாட்டார் அரசனான கர்ணன், கதம் வாசி - வலியையுடைய குதிரைகள், நடைஅற்று - நடத்தலில்லையாகி, வரிவில் கொள் - கட்டமைந்த வில்லில் தொடுக்கப்படுகிற, கணையாவைஉம் - அம்புகளெல்லாம், வலி அற்று - பலமில்லாதனவாகி, விரை தேர்உம் -வேகமாகச் செல்லுகிற இரதமும், விதம் ஆழி நிலன் உற்று - பலவகையாகியசக்கரங்கள் பூமியிற் புதையப்பெற்று, மெய்வன்புஉம் மெலிவு உற்றபின்பு -தேகபலமுங் குறைவடைந்தபின்பு, மழுவாளி - கோடாலிப்படையையுடையபரசுராமன், உதவாமல் - (அஸ்திரசஸ்திரங்களெல்லாஞ் சமயத்திற்குப்)பயன்படாமற்போம்படி, உரை செய்த - சொன்ன, சாபத்தை - சபிப்பை, உற -செவ்வையாக, உன்னினான் - எண்ணினான்; அதவா - அச்சாபமில்லாவிட்டால்(கர்ணன்), என்று உம் - எப்பொழுதும், முரண் போர் தனக்கு - வலிமையையுடையயுத்தத்துக்கு, அஞ்சும்ஓ - பயப்படுவானோ? (எ -று.)- அஞ்சமாட்டான் என்றபடி. மழு ஆளி - மழுவை ஆளுபவன், கர்ணன் இளம்பிராயத்திற் பிராமணவடிவங்கொண்டு பரசுராமரிடஞ்சென்று வில்வித்தையைக் கற்றுக் கைதேர்ந்துவருகையில், ஒருநாள் அவர் இவன்மடியின் மேல் தந்தலையைவைத்துக்கொண்டுசாய்ந்து சயனித்திருக்க, அப்பொழுது இவனால் தன்மைந்தனாகிய அருச்சுனனுக்குப்பின்பு இடையூறு நேருமென்று கருதிய தேவேந்திரன் ஒருவண்டுவடிவங் கொண்டுசென்று அவன் தொடையைத் துளைத்துப் புண்படுத்த, இரத்தம் பெருகிவழியவுங்குருவின் நித்திரைக்குப் பங்கம் வருவிக்கக்கூடாதென்று எண்ணிக் கர்ணன்அரிதிற்பொறுத்துக்கொண்டு வருந்தாதிருக்க, உடனே துயிலுணர்ந்த அவ்விராமன்அதனை நோக்கி அந்தணனுக்கு இத்தகையபொறுமை யிராதென்றெண்ணி, 'நீ யார்?உண்மையைக் கூறுவாய்' என்ன, இவனும் மறைக்கமாட்டாமல்'க்ஷத்திரியசாதியானான அதிரதனென்னுந் தேர்ப்பாகன் வளர்த்த மகன்யான்' என்ன,இருபத்தொருமுறை பூமிமுழுதுஞ் சுற்றிவந்து க்ஷத்திரியர்கள் பலரையும் வேரறுத்த அப்பார்க்கவர் கடுங்கோபங்கொண்டு, 'யான் உனக்குக் கற்றுக் கொடுத்த கல்வியனைத்துந் தக்கசமயத்தில் உதவாதபடி மறந்து போய் விடக்கடவது' என்று சாபங்கொடுத்தார். கர்ணன் அரசாண்டுவருகையில், ஒருநாள் தேரின்மீதேறி வீதியில்விரைந்து செல்லுகையில், ஒரு முனிவரது பசுவின் கன்று தேர்ச்சக்கரத்தின் கீழ்அகப்பட்டு நசுங்கி இறந்துபோய்விட, அம்முனிவர் மிக |