பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்33

யேழ்புயல்வானமிருண்டிடவெங்குமெழுந்தவிருந்துகளே
வீழ்பசியாலுழல்பேயொடுபாரிடமிக்கவிருந்துகளே.

     (இ-ள்.) தாள் - முயற்சியையும், வலி - வலிமையைமுடைய, ஆடவர் -
வீரர்களது, சிரம் - தலைகள், உருளும்படி - கீழ்விழுந்து புரளும்படி, சாயகம் -
அம்புகள், தைத்தன-; அவர் அவர் - அவ்வவ்வீரர்களது, அ உடல் - அந்தந்த
உடம்புகள், சாய் - விழுந்து கிடக்கிற, அகம் - இடங்கள்,- ஆழ் குருதி தடம்
ஒத்தன - ஆழமாகிய இரத்தம் நிரம்பிய குளத்தைப் போன்றன; ஏழ் புயல் - ஏழு
மேகங்களையுடைய, வானம் - ஆகாயமெல்லாம், இருண்டிட - இருளடையும்படி,
எங்கும்உம் - எல்லாவிடத்தும், இருந் துகள் - மிகுதியான புழுதிகள், எழுந்த -
கிளம்பின; வீழ் பசியால்- (உணவை) விரும்புகின்ற பசியினால், உழல் - வருந்துகிற,
பேயொடு - பேய்களும், பாரிடம் - பூதங்களும் விருந்துகள் மிக்க - விருந்துகளாகி
மிகுந்தன; (எ -று.)

     தாள்வலியாடவர் - காலாள் வீரருமாம். விருந்துகள்மிக்க- அங்கு உள்ள
இறைச்சியைத்தின்று இரத்தத்தைத்குடித்துப் பசிதாகங்கள் தீருமாறு பேயும்
பூதமும்மிகுதியாகவந்து திரண்டன வென்க. 'தாள்வலி' இனவெதுகை.       (57)

58.செய்கடலாமெவந்துசிவந்தகவந்தமலைந்தனவே
கைகொடுகால்கொடுதம்மின்வெகுண்டுகவந்தமலைந்தனவே
ஐவகையானகதிக்குரநாலுமழிந்தனவாசிகளே
மெய்வகையாலிவைகூரெறிகோலெறிவீரர்கைவாசிகளே.

     (இ -ள்.) சிவந்த கவந்தம் - செந்நிறமான இரத்தம், செய் கடல் ஆம் என -
சிவந்ததொரு கடல்போல, வந்து அலைந்தன - பெருகி அலையெறிந்தன;
கவந்தம் -தலையற்ற உடம்புகள், வெகுண்டு - கோபித்து, தம்மின் - தமக்குள்ளே,
கைகொடுகால்கொடு - கைகளாலும் கால்களாலும், மலைந்தன - போர்செய்தன;
வாசிகள் -குதிரைகள், ஐ வகை ஆன கதி - ஐந்துவகைப்பட்ட நடைகளையுடைய,
குரல்நால்உம் - நான்கு குளம்புகளும், அழிந்தன - அழியப்பெற்றன; இவை -
இவையெல்லாம், மெய் வகையால் - உண்மையாக, கூர் எறி கோல் எறி வீரர் கை
வாசிகள் - கூர்மை விளங்குகிற அம்புகளை எறிகின்ற வீரர்களுடைய கைகளின்
சித்திகளாம்; (எ - று.)

     செய்கடல் - புதிதாகச் செய்யப்பட்டதொரு கடலுமாம். சிவந்த கவந்தம் -
செந்நீர்; கபந்தம் -நீர்: வடசொல். கோபத்தோடு விரைந்து போர்செய்து நின்ற
வீரர்களின் உடம்புகள் தலையறுபட்ட பின்பு பதைபதைத்துக் கால்கள்
துடிப்பனவற்றை - கைகளாலுங் கால்களாலும் போர்செய்வனவாகக் குறித்தார்;
தற்குறிப்பேற்றம். கவந்தம் - நீரும் தலையற்றஉடலுமாதலை "காரறல் புவன நாரங்
கன விரதங் கவந்தம்" என்னும் நிகண்டினாலும் அறிக.                 (58)

59.தாரைகளொற்றைகள்வங்கியநீங்வயிர்சங்கமுழக்கினவே
யோரிமையிற்சிலயானைதுரங்கமசங்கமுழக்கினவே