பக்கம் எண் :

6
 

தமிழ் மொழி வரலாறு

101

6.தொல்காப்பியத் தமிழ் - உருபனியல்

1. 0 தொல்காப்பியரின் இலக்கண அமைப்பு முறை

தொல்காப்பியருக்குப் பிற்பட்ட காலத்துத் தமிழில் நேர்ந்த மாற்றங்களை ஆராயத் தொடங்குவதற்கு முன்னர்த் தொல்காப்பியத் தமிழின் உருபனியலைத் தொகுத்துக் கூற முற்படுவோம்.

தொல்காப்பியம் சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல் என இரண்டாகப் பிரிக்கின்றது. உரிச்சொல், இடைச்சொல் என்ற பிறிதொரு பாகுபாடும் உண்டு.1 இச்சொற்களைத் தொல்காப்பியம் பயன்படுத்துவதை ஆராயும்பொழுது, ‘உரிச்சொல் என்பதால் வேர் உருபன்களையும்2 ‘இடைச்சொல்’ என்பதால்


1. தொல்காப்பியம், 643, 644

 

“சொல்லெனப் படுப பெயரே வினைஎன்று
ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே”.
“இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்
அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப”.

2. தொல்காப்பியம், 782, 783, 872, 879, 936

 

“உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை
இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப்
 பெயரினும் வினையினும் மெய்தடு மாறி
 ஒருசொற் பலபொருட் குரிமை தோன்றினும்
பலசொல் ஒருபொருட் குரிமை தோன்றினும்
பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்த மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்”.
“வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா;
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன”.
“மெய்பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம்
முன்னும் பின்னும் வருபவை நாடி
ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல்
தத்தம் மரபிற் றோன்றுமன் பொருளே”.
“அன்ன பிறவுங் கிளந்த அல்ல
பன்முறை யானும் பரந்தன வரூஉம்
உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட
இயன்ற மருங்கின் இனைத்தென அறியும்”.
“குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல்”.