இதுவுமது

1844. தன்னையோ ரரச னாக்கித்
     தரங்கநீர் வளாக மாள்வித்
தின்னுயி 1ராகச் செல்லு
     நல்வினை யென்னு மின்ன
முன்னுப காதி தன்னை
     முதல்கெட முயலுங் கீழ்மை
நன்னரின் 2மன்ன னன்றே
     நரகங்கட் கரச 3னாவான்.
     (இ - ள்.) தன்னை ஓர் அரசன் ஆக்கி - தன்னை ஒப்பற்ற மன்னனாகப் பிறப்பித்து,
தரங்கம் நீர் வளாகம் ஆள்வித்து அலைகடலாற் சூழப்பட்ட உலகத்தை ஆளும்படி செய்து,
இன்னுயிராகச் செல்லும் - இனிய உயிர்போன்று நிகழ்கின்ற, நல்வினை என்னும் -
நல்வினையென்று கூறப்படுகின்ற, இன்னமுன் உபகாரிதன்னை - முன்னர் இத்தகைய
உதவிசெய்த தொன்றனை, முதல்கெட - வேரொடு அழிந்துபோமாறு, முயலும் -
முரண்நெறியிலே முயலுகின்ற, கீழ்மை - சிறுமையுடைய, நன்னர்இல் - நன்றி தேர்தல்
இல்லாத, மன்னன் அன்றே - அரசன் அல்லனோ, நரகங்கட்கு அரசன் ஆவான் -
நரகத்தை ஆளுதற்குரிய அரசனாகத் தக்கவன், (எ - று.)

     நல்வினையின் பெருமையை மறந்து தீவினைக்கட் செல்லும் அரசர் முதலியோரைக் கருதி இரங்கியவாறு. “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
      செய்ந்நன்றி கொன்ற மகற்குÓ (குறள் - 110)

     என்பவாகலின், தனக்கு நன்மையே செய்த நல்வினையைப் புறக்கணித்துத் தீவினையே
கன்றித்திரிதரும் வேந்தர் அண்ணாத்தல் செய்யா அளறு புகுவர் என்பான், “நரகங்கட்கு
அரசராவார்Ó என்றான். அரசராதல் அந்நரகத் துன்பம் முழுதும் உரிமையுடன் நுகர்தல
என்க.

(714)