குறிஞ்சி

21. நீல வால 1வட்டத்தி னிறங்கொளக்
கோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல்
ஆலு மாமழை நீள்முகி லார்த்தொறும்
ஆலு மாமயி லாலுமொர் பாலெலாம்.
     (இ - ள்.) ஒர்பால் எலாம் - அந்நாட்டின் குறிஞ்சி நிலத்து இடங்களி லெல்லாம்;
நீல ஆலவட்டத்தின் நிறம் கொளக் கோலும் பீலிய - நீல நிறத்தையுடைய ஆலவட்டத்தின்
நிறமுண்டாக விரிக்கும் பீலியினையுடையவாய்; கோடுஉயர் குன்றின்மேல் - உயர்ந்த
உச்சியினையுடைய குன்றின்மேல்; ஆலும் மாமழை நீள்முகில் ஆர்த்தொறும் - ஒலிக்கின்ற
மிகுதியான மழைப் பெருக்கினையுடைய நீண்ட முகில்கள் முழங்குந்தோறும்; ஆலும்
மாமயில் - ஆடுதலையுடைய அழகிய மயில்கள்; ஆலும் - கூத்தாடா நிற்கும். (எ - று.)

     மாலும் மாமயில் எனப்பிரித்து; மனக்களிப்படையும் அழகிய மயில்கள்
என்றுரைப்பினும் பொருந்தும். குறிஞ்சி நிலத்தின் கண் முகில்களின் முழக்கத்தைக்
கேட்கும்போதெல்லாம் மயில்களாடும் என்று குறிஞ்சி நிலத்தின் சிறப்பைக் கூறினார்.
குறிஞ்சிக்குப் பறவைகள் மயிலும் கிளியும். ஆலவட்டம்
 

( 21 )