பக்கம் எண் :


திருவாரூர்த் திருநகரச் சிறப்பு101

Periya Puranam

  கொற்றவ னநபா யன்பொற் குடைநிழற் குளிர்வ
                                தென்றால்
மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்ப
                                லாமோ.
35

     (இ-ள்.) நற்றமிழ்...நாடு - நற்றமிழ் எல்லைக்குள்ளே உள்ள
பலவற்றுள்ளும் இப்பகுதியில் நாம் சிறப்பித்துப் பேசும் நாடானது;
என்றும்....குளிர்வது - என்றைக்கும் நிலைபெறும்படி அழகிய பெருந் தோள்
வலியினாலே, உலகம், எல்லாருக்கும் பொதுவானதென்பதை மாற்றித் தனக்கே
உரியதாக்கிக் கொண்டு இனிதே காத்து வருகின்ற வெற்றியரசராகிய அநபாயச்
சோழரது அழகிய வெண்குடை நிழலிலே குளிர்ந்து வாழ்கின்றது; என்றால் -
என்று காண்கின்றோமாதலின்; மற்று அதன்....ஆமோ - அந்நாட்டின்
பெருமைகளை நம்மாலே அளவுபடுத்திக் கூறுதல் இயலுமோ? (இயலாது)

     (வி-ரை.) நற்றமிழ் வரைப்பு - பயில்வோர்க்கு நன்மையே பயக்கும்
தமிழ் வழங்கும் எல்லை. வரைப்பு - ஓர் அளவினால் வரைந்து கொள்ளப்
பெற்றது. தமிழ் எல்லை - முதலிய குறிப்புக்களை முன் 51-ம் பாட்டின்
கீழ்க் காண்க.

     நாம்புகழ் திருநாடு - “பாட்டியற்றமிழ் உரை பயின்ற எல்லையுள் -
சோழர் காவிரி நாட்டியல் பதனையான் நவிலலுற்றனன்” என்று
இப்பகுதியினை ஆசிரியர் தொடங்கினார். ஆதலின் அதனை இங்கு முடித்துக்
காட்டுகின்ற வகையிலே ‘நற்றமிழ் வரைப்பில் நாம்புகழ் திருநாடு’ என்று
கூறினார். நாம்புகழ் - மேலே நவில்வதாய்த் தொடங்கி இதுவரை பாராட்டிய
என்பதாம். தமிழ் எல்லைக்குள் நின்ற நாடு பலவற்றுள்ளும் இங்குப் புகழ்வது
அநபாயன் குடைக்கீழ்க் குளிரும் சோழநாடேயாம் - என்று குறித்து
முடித்தவாறு.

     என்றும் - எக்காலத்தும் - என்றும் காக்கும் என முடிக்க, என்றும்
குளிர்வது என்பதும் ஆம். இஃது அரசனை வாழ்த்தியதுமாயிற்று.

     பொன் தடம் தோள். தோள் வலிமையைத் தோள் என்பது உபசார
வழக்கு. குடைநிழல் - அரச ஆணையைக்குடையாக உபசரித்துக் கூறுவது
மரபு. தோள் வலிமை - அரச அங்கங்களின் வல்லமை. இதுபற்றி எமது
மாதவச் சிவஞான சுவாமிகள் கம்பராமாயண முதற்செய்யுட் சங்கோத்தர
விருத்தியில் “தோள்வலி” என்ற இடத்துக் கூறுவனவும் இங்கு வைத்து
உணரற்பாலன.

     பொதுக் கடிதல் - “பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க்கு
என்றும் பெருந் துணையை” என்ற தேவாரம் காண்க.

     இனிதுகாக்கும் கொற்றவன் - இனிமைபெறக் காவல் செய்கின்ற
வெற்றி பொருந்திய அரசன். இனிமையல்லாத வழியினும் காத்தற் றொழில்கள்
உளவாதலின் அவற்றை நீக்க இனிது என்றும், இந்நூல் செய்யும்
நிகழ்காலத்தே காத்துள்ளாராதலின் காக்கும் என்றும், தனது செய சீலத்தாற்
காக்க வல்லவராதலின் கொற்றவன் என்றும் கூறினார். கொற்றம் - வெற்றி.
குளிர்வது - நிகழ்காலத்தே உள்ளது அவரது ஆட்சியே என்பார், முன்னர்
“காக்கும்” என்றதற்கேற்பப் பின்னரும், குளிர்வது என்று முடித்துக் கூறினார்.
குளிர்வது - மகிழ்ச்சி பெற்றிருப்பது.

     அரசன் நாடுகாத்தலின் வகையினை நகரச் சிறப்பு “மாநிலங்
காவலனாவான்” என்ற திருப்பாட்டிலே பின்னர் விரித்துக்கூறி, அவ்வாறு
காத்து, அரசர்க் கிலக்கியமான மனுவேந்தன் அநபாயரது வழிமுதலாவான்
என்று எடுத்துக்காட்டும் வழியால் அநபாயரது செங்கோற் சிறப்பை,
விளக்குவார் ஆசிரியர் இங்கு "இனிது காக்கும்" எனத் தொடங்கிவைத்துக்
காட்டினார்.

     அநபாயன் - இவ்வரசர்க்கு ஆசிரியர் சேக்கிழார் அமைச்சரா
யிருந்தனர். இவ்வரசரே இப்புராணம் பாடக் காரணராயிருந்தவர். பாயிரம் (8)
திருப்பாட்டிற் காண்க.

     குளிர்வது என்றால்...விளம்பல் ஆமோ - அநபாயர் ஆட்சியின்கீழ்
மகிழ்ந்திருப்பது இந்நாடு என்று காண்போமேயாகில் அதன் பெருமை
இனைத்தெனச்சொல்ல